SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாங்காய் சாதம்

2017-11-13@ 15:25:41

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 1 கப்,
தோல் நீக்கி துருவிய மாங்காய் - 1/2 கப்,
நீளவாக்கில் நறுக்கிய பச்சைமிளகாய் - 2,
மஞ்சள் தூள், விரும்பினால் வறுத்துப் பொடித்த வெந்தயத்தூள் - 1/4 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

தாளிக்க..
.

கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலைகள்,
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்.

அலங்கரிக்க...

வறுத்த வேர்க்கடலை - 2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு,
தேங்காய்த்துருவல் - 1/4 கப்.


எப்படிச் செய்வது?

கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தாளித்து, மாங்காய்த்துருவல், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி, மஞ்சள் தூள், உப்பு, வெந்தயத்தூள், சாதம் சேர்த்து கலந்து அடுப்பைநிறுத்தவும். வேர்க்கடலை, கொத்த மல்லித்தழையை தூவி, அதன் மேல் தேங்காய்த் துருவலை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்