SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

உப்புக் கண்டம் குழம்பு

2017-11-10@ 12:15:37

என்னென்ன தேவை?
 
உப்புக் கண்டம் - 200 கிராம்
நறுக்கிய சின்னவெங்காயம் - 15
நறுக்கிய தக்காளி - 3
முருங்கைக்காய் - 1
கத்தரிக்காய் - 2
துருவி தேங்காய் - அரை மூடி
மிளகாய்த்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் - 2 டேபிள்ஸ்பூன்
புளிக்கரைசல் - 50 மில்லி
வெந்தயம் - அரை டீஸ்பூன்
உளுந்து - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு- தேவையான அளவு
நல்லெண்ணெய் - 25 மில்லி


எப்படிச் செய்வது?

முதலில் உப்புக் கண்டத்தை சூடான நீரில் சுத்தம் செய்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் 5 சின்னவெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும். இதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். இதில் புளிக்கரைசலைச் சேர்த்து பச்சை வாசனை போனத பின் உப்புக் கண்டத்தையும் சேர்த்து வேக விடவும்.

அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி வெந்தயம், உளுந்து, கறிவேப்பிலை மீதம் உள்ள வெங்காயம், முருங்கைக்காய், கத்திரிக்காய் போட்டு வதக்கி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கொதிக்க வைக்கவும். இதில் வெந்த உப்புக் கண்ட கலவையைச் சேர்த்து அரைத்து வைத்துள்ள தேங்காய் சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • damagedvinayr_idoles00

    விநாயகர் சதுர்த்தியையடுத்து பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகளில் உடைந்து சிதறி கிடைக்கும் விநாயகர் சிலைகள் !

  • delhiaccid_childead

    டெல்லியில் கட்டடம் இடிந்து விபத்து : பெண் உட்பட 4 குழந்தைகள் பலி !

  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்