SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கேப்ஸிகம், பேபிகார்ன் நூடுல்ஸ்

2017-11-09@ 16:55:21

என்னென்ன தேவை?

சைனீஸ் நூடுல்ஸ் - 2 பாக்கெட்,
கேரட், கேப்ஸிகம், பேபிகார்ன் - யாவும் கலந்து 2 கப்,
பெரிய வெங்காயம் - 2,
பச்சைமிளகாய் - 2,
இஞ்சி-பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
சோயா சாஸ் - 1 டீஸ்பூன்,
அஜினோ மோட்டோ - 1/4 டீஸ்பூன்,
வெள்ளை மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
சோள மாவு - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.


எப்படிச் செய்வது?

காய்கறிகள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். சைனீஸ் நூடுல்ஸை சிறிது உப்பு போட்டு வேகவைத்து உதிரியாக எடுத்துக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கி, காய்கள், இஞ்சி-பூண்டு விழுது, வெள்ளை மிளகுத்தூள், சோள மாவு, உப்பு போட்டு வதக்கவும். நன்கு வதங்கியதும் அஜினோமோட்டோ, சோயா சாஸ் சேர்த்து நன்கு கிளறவும். இத்துடன் வேகவைத்த நூடுல்ஸை சேர்த்துக் கிளறி இறக்கவும். சூடாக தக்காளி செட்சப்புடன் பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

  • 23-06-2018

    23-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_protest123

    நீட் தேர்வில் நிரந்தர விலக்கு கோரி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயற்சி: மாணவர்கள் கைது

  • cleanesttrainPurityIndia

    ரயில்வே பாதுகாப்பு படை சார்பில் தூய்மை ரயில் - தூய்மை இந்தியா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்