SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிஸிபேளாபாத் (சாம்பார் சாதம்)

2017-11-02@ 14:19:26

என்னென்ன தேவை?
 
பச்சரிசி - 1 டம்ளர்,
துவரம் பருப்பு - 3/4 டம்ளர்,
கத்தரிக்காய் - 2,
செளசௌ - 1/2,
பீன்ஸ் - 10,
பெரிய கேரட் - 1,
உருளைக்கிழங்கு - 1,
பச்சைமிளகாய் - 2,
தக்காளி - 2,
சின்ன வெங்காயம் - 15,
சாம்பார் பொடி - 2½ டீஸ்பூன்,
புளி - எலுமிச்சை அளவு,
மஞ்சள் தூள் - சிறிது,
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்,
கடுகு, கறிவேப்பிலை - சிறிது,
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு.
 
அரைக்க...
 
நெய் - 1 டீஸ்பூன்,
பட்டை - 2,
கிராம்பு - 2,
துருவிய தேங்காய் - 1/2 மூடி.


எப்படிச் செய்வது?

கடாயில் நெய் விட்டு அரைக்க கொடுத்த பொருட்களை வறுத்து ஆறியதும் மிக்சியில் அரைத்துக் கொள்ளவும்.  காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். புளியை 1 டம்ளர் தண்ணீர் விட்டு கரைத்து உப்பு சேர்த்து கொள்ளவும். குக்கரில் அரிசி, பருப்பு, மஞ்சள்தூள், எண்ணெய் 1 டீஸ்பூன், பெருங்காயத்தூள், சாம்பார் பொடி அனைத்தையும் ஒன்றாக சேர்த்து 6 டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாக கொதி வந்ததும் காய்கறிகளை சேர்த்து 4 அல்லது 5 விசில் விட்டு அடுப்பை நிறுத்தவும்.
 
கடாயில் 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை தாளித்து புளிக்கரைசலை ஊற்றி கொதி வந்ததும் வெந்த சாதத்தில் கொட்டவும். 2 டீஸ்பூன் வறுத்து அரைத்த பொடியையும் சாதத்தில் கொட்டி நன்றாக கிளறி, சிறு தீயில் 2 நிமிடம் வைத்து இறக்கவும். கடைசியாக ஒரு சட்னி கரண்டி அளவு நெய்யை ஊற்றி கிளறி, கொத்தமல்லித்தழையால் அலங்கரித்து பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-11-2017

    19-11-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • odingaelectionkenya

    கென்யாவில் அதிபர் தேர்தல் எதிரொலி: எதிர்க்கட்சித் தலைவர் ரெயாலா ஒடிங்காவின் ஆதரவாளர்கள் கலவரம்

  • serina_wed_photos

    டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ் மற்றும் அலெக்சிஸ் ஓஹானியன் திருமணம் புகைப்படங்கள்

  • Newyork_Fire

    நியூயார்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து: தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் காயம்

  • mikro_yogiii

    பில்கேட்ஸ் - முதல்வர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு! : நிதியுதவி, என்சிபாலிட்டிஸ் தடுப்பூசி திட்டங்கள் குறித்து ஆலோசனை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்