SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழைத்தண்டு சூப்

2017-07-26@ 11:50:28

என்னென்ன தேவை?

வாழைத்தண்டு - மீடியம் அளவு
சின்ன வெங்காயம் - 3
தக்காளி - 1
சீரகம் - அரை ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
மிளகு - அரை ஸ்பூன்
தனியா - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
இஞ்சி, பூண்டு விழுது - சிறிதளவு
கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு


எப்படிச் செய்வது?

வாழைத்தண்டை பொடியாக நறுக்கி தண்ணீரில் போட்டு, குச்சியால் நாரை நீக்கி தனியாக வைக்கவும். பின்னர் சீரகம், தனியா, மிளகு மூன்றையும் வறுத்து மிக்ஸியில் அரைத்து தூளாக்கவும். இப்போது காய்ந்த மிளகாய், வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, இஞ்சி பூண்டு விழுது என அனைத்தையும் மிக்ஸியில் அரைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு, அரைத்த விழுதை நன்கு வதக்கவும். இத்துடன் வாழைத்தண்டை சேர்த்து 5 டம்ளர் நீர் விட்டு லேசாக கொதிக்க வைக்கவும். சிறிது நேரம் கழித்து ஏற்கனவே அரைத்த சீரக கலவைத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். வழக்கம்போல வாசனைக்கு கறிவேப்பிலை, மல்லியை போட்டு இறக்கவும். அவ்வளவுதான்...வாழைத்தண்டு சூப் ரெடி... வீட்டில் அனைவரும் குடிக்கலாம்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-07-2018

    22-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்