SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நாட்டுக்காய்கறிகள் மிக்ஸ் சூப்

2017-07-11@ 15:14:13

என்னென்ன தேவை?

பீர்க்கங்காய், புடலங்காய், கேரட், கோவைக்காய், நீர்ப்பூசணிக்காய் - தலா 50 கிராம்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு, மிளகுத்தூள் - தேவைக்கு,
மல்லித்தழை - சிறிது,
பூண்டு - 3 பல்,
தண்ணீர் - 750 மி.லி.,
பெரிய வெங்காயம் - 1/2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
பெங்களூர் தக்காளி - 1/2.


எப்படிச் செய்வது?

வெங்காயம், தக்காளி, பூண்டு, காய்கறிகளை பொடியாக நறுக்கவும். ஒரு அகலமான தவாவில் வெண்ணெயை போட்டு உருகியதும் வெங்காயம், பூண்டு, தக்காளியை சேர்த்து வதக்கி, காய்கறிகளை வதக்கவும். இத்துடன் சீரகம், உப்பு, மிளகுத்தூளை சேர்த்து கிளறி 750 மி.லி. தண்ணீரைச் சேர்த்து மிதமான சூட்டில் வேக விடவும். தண்ணீர் 500 மி.லி. சுண்டியதும் இறக்கவும். வெந்த காய்களை மிக்சியில் அரைத்தோ அல்லது நன்கு மசித்து கொண்டோ, சிறிது சூடு செய்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து இறக்கவும். மல்லித்தழையைத் தூவி சூடாக பரிமாறவும்.

குறிப்பு: சூப்பைக் கொதிக்கவிட்டால் அதிலுள்ள சத்துக்கள் வீணாகி விடும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • polis_petrol11

    போலீசார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; தூத்துக்குடியில் நீடிக்கிறது பதற்றம்

  • poepl_chennaii11

    சென்னை மக்களை வாட்டி வதைக்கும் கத்திரி வெயில் !...

  • thoothukudi_polissaa

    தூத்துக்குடியில் 2-வது நாளாக துப்பாக்கிச் சூடு : போலீஸ் வாகனங்களுக்கு தீவைப்பு

  • duchess_meganmarkel

    திருமணத்திற்கு பிறகு முதன்முறையாக டச்சஸ் ஆப் சுசக்ஸ் தோற்றத்துடன் உலா வந்த மேகன் மார்க்கல்

  • hyderabad_bustop11

    ஏசி, ஏடிஎம், காபி இயந்திரங்கள்,வைஃபை உள்ளிட்ட வசதிகளுடன் நவீன பேருந்து நிறுத்தம் :ஹைதராபாத்தில் வினோதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்