SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

முட்டை கிரேவி

2017-06-19@ 14:36:55

என்னென்ன தேவை?

பல்லாரி - 2
தக்காளி - 2
இஞ்சி - 10 கிராம்
பூண்டு - 10 கிராம்
மல்லி இலை - சிறிது
முட்டை - 3
மிளகாய்த்தூள் - 15 கிராம்
தேங்காய் - 2 சில்
முந்திரி பருப்பு - 25 கிராம்
சீரகம் - 5 கிராம்
உப்பு - தேவையான அளவு
மல்லித்தூள் - 10 கிராம்
சீரகத்தூள் - 5 கிராம்


எப்படிச் செய்வது?

முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியை நறுக்கவும். இஞ்சி, பூண்டு, விழுதை அரைத்து எடுத்துக்கொள்ளவும். தேங்காய், முந்திரியை மிக்சியில் நன்கு அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம், வெங்காயம் சேர்த்து வதக்கவும். இப்ப இஞ்சி, பூண்டு, விழுது, தக்காளியையும் சேர்த்து கிளறி, மிளகாய்த்தூளை சேர்த்து வதக்கவும். இத்துடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்த தேங்காய் முந்திரி பொடி, உப்பை சேர்த்து கொதிக்க விடவும். பின்பு அவிச்ச முட்டையை சேர்த்து, ஒரு கொதி வரவும் இறக்கி விடவும். அவ்வளவுதான்... காளான் பிரியாணிக்கு, சூடான, சுவையான முட்டை கிரேவி கிடைச்சாச்சு...!

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்