SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சீரக பிஸ்கெட்

2017-06-16@ 17:27:10

என்னென்ன தேவை?

கோதுமை மாவு - 1 கப்,
வெண்ணெய் - 1/4 கப்,
ஐசிங் சுகர் - 1/4 கப்,
காய்ச்சி ஆறிய பால் - 1/4 கப்,
பேக்கிங் சோடா - 1/2 டீஸ்பூன்,
டேபிள் சால்ட் - 1/4 டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்,
சீரகம் - 2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கோதுமை மாவு, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து இரண்டு முறை சலித்து வைக்கவும். வெண்ணெயை பீட்டர் அல்லது விஸ்க் கொண்டு நன்கு நுரைக்க அடித்து, அதனுடன் ஐசிங் சுகர் மற்றும் டேபிள் சால்ட் சேர்த்து நன்கு நுரைத்து வரும் வரை அடிக்கவும். இப்போது சலித்து வைத்துள்ள மாவுக் கலவை மற்றும் சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும். அதனுடன் சிறிது சிறிதாக பால் சேர்த்து மென்மையாக பிசைந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.

கோதுமை மாவை தூவி பிசைந்த மாவை 1/4 இன்ச் திக்கான சப்பாத்தியாக தேய்க்கவும். பின்பு விருப்பமான வடிவில் கட் செய்யவும். பேக்கிங் டிரேயில் 1 இன்ச் இடைவெளி விட்டு பிஸ்கெட்டுகளை அடுக்கி வைத்து, 200 டிகிரி செல்சியஸில் 10 நிமிடங்கள் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில், 10 நிமிடங்கள் 180 டிகிரி செல்சியசில் பேக் செய்யவும். டிரேயை வெளியில் எடுத்து ஆற வைத்து எடுத்து வைக்கவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்