SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆப்பிள் சார்லேட்

2017-06-15@ 14:42:56

என்னென்ன தேவை?

ஆப்பிள் - 1/2 கிலோ,
வெண்ணெய் - 100 கிராம்,
பிரெட் ஸ்லைஸ் - 12,
பொடித்த சர்க்கரை - 2 கப்,
ஜாதிக்காய் தூள் - ஒரு சிட்டிகை,
பட்டைத்தூள்- ஒரு சிட்டிகை,
பொடிக்காத சர்க்கரை - 2 டேபிள்ஸ்பூன்,
ஐஸ்கிரீம் அல்லது கிரீம் - 2 கப்.


எப்படிச் செய்வது?

ஆப்பிளை துண்டு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். இதனுடன் பொடிக்காத சர்க்கரை, சிறிதளவு வெண்ணெய் கலந்து இரண்டையும் சேர்த்து ஒரு கனமான பாத்திரத்தில் போட்டு மூடி வைத்து நன்றாக மிருதுவாகும் வரை மெல்லிய தீயில் வைக்கவும். பிறகு அதை லேசாக மசிக்கவும்.பொடித்த சர்க்கரை, ஜாதிக்காய் தூள், பட்டைத்தூள், இப்போது பிரெட் துண்டுகளின் இரு பக்கமும் வெண்ணெய் தடவவும்.

ஒரு குழிவான ஜெல்லி மோல்ட் (கடைகளில் கிடைக்கும்) எடுத்து சிறிதளவு வெண்ணெயை தடவி, பிரெட் ஸ்லைஸ்களை நன்றாக அமுக்கி வைத்து பாத்திரத்தின் அடி மற்றும் பக்கங்களில் பொருத்தவும். தயாராக வைத்துள்ள மசித்த ஆப்பிளை நிரப்பி மேலே பிரெட் துண்டுகளை வைத்து 180 டிகிரி செல்சியஸில் பேக் செய்யவும். பொன்னிறமான பின் ஸ்லைஸ் செய்து ஐஸ்கிரீமுடன அல்லது கிரீமுடனோ பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • teacher_strike123

    சென்னையில் நடைபெற்ற இடைநிலை ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம் வாபஸ்..!

  • indo_fire_dead

    இந்தோனேஷியாவில் எண்ணெய் கிணற்றில் தீ : 21 பேர் பரிதாப பலி

  • hawai_volcano123

    ஹவாய் தீவு அருகே உள்ள எரிமலையில் சீற்றம்...ஆறாக ஓடும் எரிமலைக் குழம்பு!

  • aerospaceexpoberling

    பெர்லிங்கில் சர்வதேச ஏரோஸ்பேஸ் கண்காட்சி : பல்வேறு நாடுகளின் புதுமையான கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன

  • accidentkushinagar

    உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகரில் பள்ளிப்பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 11 மாணவர்கள் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்