SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் காளான் சீஸ் மிக்ஸ்

2017-06-12@ 14:53:38

என்னென்ன தேவை?
   
காளான் - 250 கிராம்,
உப்பு - தேவைக்கு,
வெண்ணெய் - 50 கிராம்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன், பனீர் - 200 கிராம்,
நறுக்கிய குடைமிளகாய் - 1,
நறுக்கிய பெரிய வெங்காயம் - 1,
ஃப்ரெஷ் சீஸ் - 50 கிராம்.


எப்படிச் செய்வது?
   
காளானை சிறு துண்டுகளாக நறுக்கவும். பனீரை சதுர துண்டுகளாக நறுக்கவும். கடாயில் வெண்ணெயை போட்டு உருகியதும் காளான், பனீரை போட்டு நன்கு வதக்கி, வெங்காயம், குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். தேவையானால் சிறிது தண்ணீர் சேர்த்து காளான் வேகும் வரை வதக்கி, உப்பு, மிளகுத்தூள் சேர்த்து தண்ணீர் வற்றி வறுவலாக வந்ததும், மேலே சீஸை துருவி அலங்கரித்து பரிமாறவும்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

  • gst_tax11

    ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • tasMACCLOSingparotesttst

    "டாஸ்மாக் மூடும் போராட்டம்’’ என கையில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

  • mbbs_bds_11

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளில் 8,349 விண்ணப்பங்கள் விநியோகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்