SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மணக்கும் நெய் சாதம்

2017-06-05@ 12:35:14

என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ,
நெய் - 5 ஸ்பூன்
ஏலக்காய் - 2
முந்திரி - 10 கிராம்
பாதாம் பருப்பு - 10 கிராம்
திராட்சை - 10 கிராம்
பட்டை - சிறிதளவு
பிரிஞ்சு இலை - 1
பல்லாரி - 1
கேரட் - 1


எப்படிச் செய்வது?

பாஸ்மதி அரிசியை நன்றாக கழுவவும். குக்கரில் நெய் ஊற்றி முந்திரி, திராட்சை, பாதாம்பருப்பு போட்டு வறுத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்னர் நெய்யில் பிரிஞ்சி இலை, பட்டை, ஏலக்காய் போடவும். இத்துடன் பொடியாக நறுக்கிய பல்லாரி வெங்காயத்தை போட்டு வதக்கவும். இக்கலவையுடன் அரிசியை போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.

பின்னர் நறுக்கிய கேரட், தேவையான உப்பு சேர்த்து கிளறவும். பின்னர் 3 கப் நீர் ஊற்றி குக்கரை மூடவும். 2 விசில் வந்ததும் இறக்கவும். சிறிது நேரம் கழித்து திறக்கவும். ஏற்கனவே வாசனை தூக்கும். இப்ப முந்திரி, திராட்சை, பாதாம் போட்டா கேட்கவா வேணும். கூடுதலாகவே கும்மென்ற வாசனையுடன் நெய் சாதம் தயார்.. குட்டீஸ்களுக்கு கொடுத்து பாருங்க... அப்புறம் பாருங்க...!

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • PrimeMinisterofficefire

    டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து : பெரும் சேதம் தவிர்ப்பு

  • Diwalipeoplekoyampet

    தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல மக்கள் படையெடுப்பு: கோயம்பேட்டில் போதிய பேருந்தின்றி மக்கள் தவிப்பு

  • DEshpande

    காந்தியவாதி நிர்மல் தேஷ்பாண்டேவின் பிறந்தநாள் விழா: சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி பங்கேற்பு

  • IvoryCoast

    ஐவரி கோஸ்ட் கடலில் விழுந்து விபத்துக்குள்ளான கார்கோ விமானம்: 4 பேர் பலி!

  • 17-10-2017

    17-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்