SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆலூர் புர்தா

2017-06-01@ 14:41:35

என்னென்ன தேவை?
 
உருளைக்கிழங்கு - 1/4 கிலோ,
பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்,
எலுமிச்சைப்பழச்சாறு - 1/2 பழம்,
நெய் - 2 டேபிள்ஸ்பூன்,
வேகவைத்த காராமணி - 2 டேபிள்ஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது,
உப்பு - தேவைக்கு,
கடுகு - 1/2 டீஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை,
காய்ந்தமிளகாய் - 3.


எப்படிச் செய்வது?
 
குக்கரில் உருளைக்கிழங்கை சிறிது தண்ணீர் விட்டு வேகவைத்து மசித்துக் கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்ந்ததும் கடுகு, காய்ந்தமிளகாய் தாளித்து, பெருங்காயத்தூள், வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய்த்தூள், வெந்த காராமணி, உப்பு போட்டு கிளறி, மசித்த உருளைக்கிழங்கை போட்டு புரட்டி, எலுமிச்சைப் பழச்சாறு, கொத்தமல்லித் தழையை தூவி கிளறவும். தேங்காய்த்துருவல் சேர்த்து இறக்கவும். சூடாக சாதத்துடன் பரிமாறவும். சப்பாத்தி, தோசைக்கு சைட் டிஷ் ஆகவும், ஸ்டஃப்டு செய்யவும் பயன்படுத்தலாம்.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • poRURlaketyugbyvfgy

    போரூர் ஏரியில் இருந்து தண்ணீர் எடுக்க ராட்சத மோட்டார்கள் மற்றும் சுத்திகரிப்பு கருவிகள் பொருத்தும் பணி நடந்து வருகிறது

  • 20YEARfraewelllsjhip

    இந்திய கடலோர காவல் படையில் 20 ஆண்டுகளாக பணியில் ஈடுபட்ட ரோந்து கப்பல் ‘கனக்லதா பருவா’ விடைபெறும் நிகழ்ச்சி

  • 24-06-2017

    24-06-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • nasaWORldLIGHestSATELL

    நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட ‘கலாம் சாட்’ செயற்கைகோள்... தமிழக மாணவருக்கு குவியும் பாராட்டுகள்!

  • gulfCOASTcindy

    புயல் காரணமாக அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் பலத்த மழை : இயல்பு வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்