SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பனீர் பாதாம் மிக்ஸ் ஃப்ரை

2017-05-30@ 14:14:42

என்னென்ன தேவை?

பனீர் - 350 கிராம்,
உப்பு - தேவைக்கு,
மிளகுத்தூள் - 2 டீஸ்பூன்,
இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
பாதாம் - 50 கிராம்,
நறுக்கிய கறிவேப்பிலை - சிறிது,
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
சின்ன வெங்காயம் - 200 கிராம் (பொடியாக நறுக்கவும்).


எப்படிச் செய்வது?

பாதாமை தண்ணீரில் 6 மணி நேரம் ஊறவைத்து விழுதாக அரைத்துக் கொள்ளவும். பனீரை சிறிய சதுர துண்டுகளாக நறுக்கி, கொதிக்கும் தண்ணீரில் 5 நிமிடங்கள் வேகவிட்டு பனீரைப் பிழிந்து எடுத்து தனியே வைக்கவும். கடாயில் எண்ணெயை விட்டு சூடானதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து பச்சை வாசனை போக வதக்கி வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின் அரைத்த பாதாம் விழுதைச் சேர்த்து கிளறி, பனீர், உப்பு, மிளகுத்தூளைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும். கறிவேப்பிலையை கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

குறிப்பு: பேலியோ டயட்டில் அதிக காரம், எந்தவொரு பாக்கெட் மசாலாவையும் சேர்க்கக் கூடாது. செக்கில் ஆட்டிய எண்ணெயை மட்டும் பயன்படுத்தவும். ரீபைண்ட் ஆயில் மற்றும் ஹைட்ரோஜெனேடட் ஆயிலைப் பயன்படுத்தக் கூடாது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-06-2018

    24-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kmkharippastatue

    சென்னையில் இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதி கே.எம்.கரியப்பாவின் சிலை திறப்பு!

  • Stalinarrestvolunteersstirstir

    தி.மு.க. தொண்டர்களுடன் மு.க.ஸ்டாலின் கைது: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

  • president_kovindh_cuba123

    கியூபாவில் உள்ள பிடல் காஸ்ட்ரோ மற்றும் ஜோஸ் மார்டி நினைவிடத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மரியாதை!

  • RePlantingCanada

    அழிந்துவரும் காடுகளை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கனடா நாட்டு மக்கள்: வருவாயும் கிடைப்பதால் மகிழ்ச்சி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்