SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மிஸல் பாவ்

2017-05-23@ 15:20:42

என்னென்ன தேவை?

அவல் - 1/2 கப்,
உருளைக்கிழங்கு - 3,
ஓமப்பொடி (சேவ்) - 50 கிராம்,
தக்காளி ப்யூரி - 1/2 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க தக்காளி - 1,
நறுக்கிய கொத்தமல்லித்தழை - 1/2 கப்,
கறுப்பு கொண்டைக்கடலை - 3 டேபிள்ஸ்பூன்,
வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது),
பச்சைப்பயறு - 3 டேபிள்ஸ்பூன்,
பூண்டு விழுது - 1 டீஸ்பூன்,
கோதுமை பிரெட், உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
தாளிக்க கடுகு - 1/2 டீஸ்பூன்,
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்.


எப்படிச் செய்வது?

கொண்டைக் கடலை, பச்சைப்பயறை தண்ணீரில் 3 மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.

கிரேவி செய்ய...
 
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெங்காயம், பூண்டு விழுது வதக்கி, நறுக்கிய உருளைக்கிழங்கு, உப்பு, தக்காளி ப்யூரி, மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொத்தமல்லித்தழையை தூவி, கடலை மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். பச்சை வாசனை போனதும் இறக்கவும்.
 
மிஸல் செய்ய...
 

அவலை அலசி கடுகு தாளித்து, வெந்த கொண்டைக்கடலை, பச்சைப்பயறு, உப்பு, மிளகுத்தூள் போட்டு கிளறி வைக்கவும்.
 
பரிமாறும் முறை...

 
ஒரு பவுலில் முதலில் தாளித்து வைத்துள்ள அவலைப் போட்டு, அதன் மீது உருளைக்கிழங்கு கிரேவி ஊற்றி வெங்காயம், தக்காளி, கொத்தமல்லித்தழை, சேவ் தூவி அலங்கரித்து பிரெட் உடன் பரிமாறவும்

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • SuperCup

    ஸ்பானிஸ் சூப்பர் கோப்பை கால்பந்து போட்டி: பார்சிலோனா அணியை வீழ்த்தி ரியல் மாட்ரிட் அணி சாம்பியன்

  • bihar_floods

    வட மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு : இதுவரை பலி எண்ணிக்கை 270 ஆக உயர்வு

  • 10000EGGpmnklete

    10000 முட்டைகளால் உருவான ராட்சத ஆம்லெட் - பெல்ஜியம் விழாவில் மக்கள் கொண்டாட்டம்

  • 17-08-2017

    17-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 300KILKLES600missing

    மேற்கு ஆப்ரிக்காவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 300 பேர் பலி : 600 பேர் மாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்