SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காலிஃப்ளவர் நெய் ரைஸ்

2017-05-08@ 14:11:23

என்னென்ன தேவை?

காலிஃப்ளவர் - 1,
சீரகம் - 1 டேபிள்ஸ்பூன்,
இஞ்சி - 1 இன்ச் அளவு (பொடியாக நறுக்கவும்),
நறுக்கிய பூண்டு - 5 பல்,
மிளகுத்தூள் - 1½ டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,  
பெரிய வெங்காயம் - 1 (நறுக்கவும்),
நெய் - 1½ டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து மிக்சியில் அரிசி அளவிற்கு பொடித்துக் கொள்ளவும். கடாயில் நெய் சேர்த்து சீரகம், வெங்காயம், இஞ்சி, பூண்டு துண்டுகள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, காலிஃப்ளவர், உப்பு சேர்த்து நன்கு கலந்து இறக்கவும். தண்ணீர் அதிகம் சேர்த்தால் காலிஃப்ளவர் குழைந்து விடும். ஆகவே இட்லி பானைத் தட்டில் வதக்கிய கலவையை 5 நிமிடத்திற்கு வேகவைத்து இறக்கவும். வெந்த காலிஃப்ளவரை கடாயில் கொட்டி அடுப்பில் வைத்து ஒருமுறை கிளறி இறக்கி பரிமாறவும்.

குறிப்பு: பேலியோ டயட்டில் ராகி, கம்பு, சோளம் போன்ற தானியங்களை கொண்டு சமைத்த உணவை சாப்பிடக்கூடாது. கோதுமையில் செய்த எந்த உணவையும் சாப்பிடக்கூடாது. மதிய உணவுக்காக காலிஃப்ளவர் ரைஸை சாப்பிடலாம். வெரைட்டி ரைஸைப் போல் காலிஃப்ளவரிலும் வெரைட்டி ரைஸ் செய்யலாம்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு செய்யுங்கள் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Thiruvarurchariot

    உலகப்புகழ் பெற்ற ஆழித்தேரோட்டம் வெகுவிமர்சியாக தொடங்கியது..... விழாக்கோலம் பூண்டது திருவாரூர்

  • 27-05-2018

    27-05-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • modi_bahvan_bang

    வங்காளதேசம் பவன் ஆய்வகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி!

  • proteststerliteissue

    சென்னையில் தமிழ்நாடு கலை இலக்கிய ஊடக செயற்பாட்டார்கள் கூட்டமைப்பு போராட்டம்

  • LibyaCarbombAttack

    லிபியாவின் பெங்காஸி நகரில் கார் குண்டு தாக்குதல்: 7 பேர் பரிதாபமாக உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்