SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

2017-05-05@ 14:49:24

என்னென்ன தேவை?

கத்தரிக்காய் - 250 கிராம்,
மல்லித்தழை - சிறிது,
தக்காளி - 2,
சீரகம் - 1 டீஸ்பூன்,
சின்னவெங்காயம் - 50 கிராம்,
தேங்காய்த்துருவல் - 100 கிராம்,
காய்ந்த மிளகாய் - 3,  
நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன்,
பூண்டு - 5 பல்,
கறிவேப்பிலை - சிறிது,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கத்தரிக்காயின் காம்பை நீக்கி துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன வெங்காயம், தக்காளி, மல்லித்தழையை நறுக்கிக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடானதும் கத்தரிக்காயை போட்டு நன்கு பொன்னிறமாக வதக்கி, சின்ன வெங்காயம், பூண்டு, காய்ந்தமிளகாய், தேங்காய்த்துருவல், தக்காளி, சீரகத்தைச் சேர்த்து வதக்கவும். பின் மல்லித்தழை, கறிவேப்பிலையை போட்டு வதக்கி இறக்கவும். சூடு ஆறியதும் நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவர் ரொட்டி மற்றும் பேன் கேக்குடன் பரிமாறவும்.

குறிப்பு: புடலங்காய், பீர்க்கங்காய், சுரைக்காய், முள்ளங்கி, கோவைக்காய், கோஸிலும் சட்னி செய்யலாம். பேலியோவில் கேரட், பீட்ரூட்டை அதிகம் சேர்க்கக்கூடாது.

பொருத்தமான வரன் தேடுகிறீர்களா? தமிழ்மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mIMANGAIhaecvsayrainhuhfd

    தொடரும் கனமழையால் வெள்ளக்காடான மும்பை : மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை

  • sBARAmailOPENERelppMHNMDK

    சபரிமலையில் ஆறாட்டு விழா துவக்கம் : இருமுடி கட்டுடன் வந்தது யானை

  • gst_tax11

    ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜவுளி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

  • tasMACCLOSingparotesttst

    "டாஸ்மாக் மூடும் போராட்டம்’’ என கையில் பதாகைகள் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

  • mbbs_bds_11

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு முதல் நாளில் 8,349 விண்ணப்பங்கள் விநியோகம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்