வெங்காயம்  அரைத்துவிட்ட  சாம்பார்

Date: 2015-02-02@ 14:08:28

என்னென்ன தேவை?

சின்ன வெங்காயம் - 10 (தோல் உரித்துக் கொள்ளவும்),
எண்ணெய் - 1 டீஸ்பூன்,
கடுகு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 1,
கறிவேப்பிலை - சிறிது,
பூண்டு - 3 பல்,
பெரிய நாட்டுத் தக்காளி - 1 (பொடியாக நறுக்கிக் கொள்ளவும்),
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
நெய் - 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லி இலை - 2 டீஸ்பூன்,
புளி - நெல்லிக்காய் அளவு (கரைத்துக் கொள்ளவும்),
சாம்பார் தூள் - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு.

வறுத்து அரைக்க...

கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்,
சிவப்பு மிளகாய், தனியா - தலா 2 டீஸ்பூன் (வெறும் கடாயில் வறுத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்),
தேங்காய் - 1/2 மூடி (துருவி, வறுத்து அரைத்துக் கொள்ளவும்).
அரைத்த வெங்காயம் - (பாதி வெங்காயம்),
துவரம் பருப்பு - 1/2 கப் (வேக வைத்துக் கொள்ளவும்).  

prescription savings card link prescription drug coupons
prescription savings card sporturfintl.com prescription drug coupons
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis
drug coupon blog.nvcoin.com lilly coupons for cialis

எப்படிச் செய்வது?  

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்துத் தாளிக்கவும். அத்துடன் பச்சை மிளகாய், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் சின்ன வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பிறகு நறுக்கிய தக்காளி, அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். பச்சை வாசனை போன பிறகு புளிக் கரைசலை விடவும். அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். ஒரு கொதி வந்த பிறகு சாம்பார் தூள் சேர்க்கவும்.

சிறிது நேரத்துக்குப் பிறகு வேக வைத்து மசித்த பருப்பைச் சேர்க்கவும். சாம்பாரை இறக்குவதற்கு 5 நிமிடங்களுக்கு முன்னால் வறுத்து அரைத்த பொடி, தேங்காய் விழுது சேர்த்து நன்கு மணம் வரும் போது அடுப்பை அணைக்கவும். அதில் கொத்தமல்லி, நெய் சேர்த்துக் கொள்ளவும். அரைத்து விட்ட சாம்பார் தயார்.




Like Us on Facebook Dinkaran Daily News