மாதுளை - பனீர் கிரேவி

Date: 2015-01-30@ 14:25:34

என்னென்ன தேவை?

பனீர் - 1/4 கிலோ,
மாதுளம் பழம் - 1,
பூண்டு - 10 பல்,
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1 கப்,
சதுரமாக வெட்டிய குடை மிளகாய்  - 1 கப்,
வெண்ணெய் - 2 டீஸ்பூன்,  
கறிவேப்பிலை - 2 கொத்து,
உப்பு - தேவைக்கு,
எண்ணெய் - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

மாதுளம் பழத்தின் முத்துகள், மிளகாய் தூள், பூண்டு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் காயவைத்து அதில் குடைமிளகாயைப் போட்டு  நன்கு வதக்கவும். அதில் அரைத்த கலவை, உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.  பிறகு பனீர் துண்டுகள் சேர்க்கவும். கறிவேப்பிலை தனியாக  பொரித்துக் கொள்ளவும். அத்துடன் நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்து, மாதுளை மசாலாவில் சேர்த்து வெண்ணெயைப் போட்டுப் பரிமாறவும்.

Like Us on Facebook Dinkaran Daily News