SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சைனீஸ் இறால் ஸ்டர் ஃப்ரை

2017-12-07@ 15:06:14

என்னென்ன தேவை?

இறால் - 500 கிராம்,
இஞ்சி - 1 இன்ச் அளவு,
ஸ்பிரிங் ஆனியன் - 2,
நறுக்கிய சிவப்பு,
பச்சை குடைமிளகாய் - தலா 1,
வேர்க்கடலை எண்ணெய் - 3 கப்.

மாரினேட் செய்ய...

உப்பு - 1 டீஸ்பூன்,
சோளமாவு - 1½ டேபிள்ஸ்பூன்.

சாஸ் செய்ய...

சிக்கன் வேகவைத்த தண்ணீர் - 6 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - 1 டீஸ்பூன்,
உப்பு - 1/2 டீஸ்பூன்,
தக்காளி சாஸ் - 1/4 கப்,
சோளமாவு - 1 டேபிள்ஸ்பூன்,
ஹாட் சில்லி ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?

இஞ்சியை தோல் சீவி மெல்லிய தாக துருவிக் கொள்ளவும். ஸ்ப்ரிங் ஆனியனில் வெங்காயம் மற்றும் அதன் தழைகளை தனியாக நறுக்கி வைக்கவும். இறாலை உப்பு போட்டு அரைமணி நேரம் ஊறவைக்கவும். கடாயில் ஹாட் சில்லி ஆயில் சேர்த்து தக்காளி சாஸ், சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி தனியே வைக்கவும். சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து தனியே வைக்கவும்.

கடாயில் வேர்க்கடலை எண்ணெயை ஊற்றி இறாலை வறுத்தெடுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் அதிகமாக உள்ள எண்ணெயை எடுத்து விட்டு, 1½ கரண்டி எண்ணெய் மட்டும் வைத்து இஞ்சித்துருவல், ஸ்ப்ரிங் ஆனியனை போட்டு வதக்கி, குடைமிளகாயை சேர்த்து வதக்கவும். இத்துடன் சாஸ் கலவை, சிக்கன் வேகவைத்த தண்ணீர் சேர்த்து கலந்து, வறுத்த இறாலையும் சேர்க்கவும். பின்பு சோளமாவு கரைசலை ஊற்றி கொஞ்சம் கெட்டியானதும் இறக்கி, ஃப்ரைடு ரைசுடன் பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • female_lion111

    தாயை இழந்த மான் குட்டியை பரிவுடன் வளர்த்து வரும் பெண் சிங்கம்

  • syria_arasupadaigal

    சிரியாவில் போர் : அரசு படைகள் உக்கிர தாக்குதலில் 20 குழந்தைகள் உள்பட 100 பேர் பலி

  • indo_pugai11

    அதிபயங்கரமாக வெடித்துச் சிதறிய சினாபங் எரிமலை: வானுயர எழுந்தது நெருப்புப் புகை

  • ElephantRecreation

    மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு சிறப்பு முகாம் நிறைவு

  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X