SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மஸ்டர்ட் ஃபிஷ் டிக்கா

2017-11-14@ 16:01:18

என்னென்ன தேவை?

சதுரமாக வெட்டப்பட்ட மீன் துண்டுகள் - 1/2 கிலோ,
கடுகு - 2 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள் கடுகு - 1 டேபிள்ஸ்பூன்,
பச்சைமிளகாய் - 4,
கசகசா - 1 டேபிள்ஸ்பூன்,
ஹங்க் கர்ட் - 1/3 கப்,
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்,
கடுகு எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

கடுகு, மஞ்சள் கடுகு, பச்சைமிளகாய், கசகசா, 1 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளவும். தயிரை நன்கு அடித்துக் கொள்ளவும். பாத்திரத்தில் அரைத்த மசாலா, தயிர், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து, இந்த மசாலாவை மீன் மேல் முழுக்க தடவி 1 மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு மீன் துண்டுகளை ஒவ்வொன்றாக ஸ்க்யூவர் குச்சியில் குத்தி கிரில் செய்யவும்  அல்லது தவாவில் கடுகு எண்ணெய் சேர்த்து மீன் முழுவதும் வேகும்படி பொரித்தெடுத்து பரிமாறவும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-02-2018

    21-02-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • electrictrainchennai

    சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே நவீன மின்சார ரயில் சேவை தொடங்கியது

  • SharjahLightFestival

    ஷார்ஜாவில் ஒளி திருவிழா: வண்ண விளக்குகளால் ரம்மியமாக மின்னிய நகரம்!

  • aircrashsearching

    ஈரானில் விமான விபத்து: தேடுதல் பணியில் மீட்பு குழுவினர் தீவிரம்

  • duofestivalsouthkorea

    தென்கொரியாவில் டூயோ பாரம்பரிய விழா கொண்டாட்டம்: டூயிங் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்
X