SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அறுபதாம் குருவை பட்டாணி தோசை

2018-03-13@ 13:06:34

என்னென்ன தேவை?

அறுபதாம் குருவை அரிசி - 1 குவளை,
உளுந்து - 1/5 குவளை,
வெந்தயம் - 1/4 டீஸ்பூன்,
பச்சைப் பட்டாணி - 100 கிராம்,
நறுக்கிய வெங்காயம் - 25 கிராம்,
தக்காளி - 25 கிராம்,
வத்தல் பொடி - 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி - 1 டீஸ்பூன்,
கரம்மசாலா பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

அறுபதாம் குருவை அரிசியை தனியாகவும், உளுந்துடன் வெந்தயம் சேர்த்து தனியாகவும் ஊற வைக்கவும். ஊறியதும் இரண்டையும் தனித்தனியாக கிரைண்டரில் அரைத்து உப்பு சேர்த்து கலந்து, 4 மணி நேரம் புளிக்க வைக்கவும். பச்சைப் பட்டாணியை 6 மணி நேரம் ஊறவைத்து வேக வைக்கவும். கடாயில் எண்ணெயை காயவைத்து வெங்காயம், தக்காளி, கேரட், பச்சைப் பட்டாணி சேர்த்து வதக்கி, வத்தல் பொடி, மஞ்சள் பொடி, கரம்மசாலா, உப்பு கலந்து வதங்கியதும் இறக்கவும்.
பச்சைப்பட்டாணி கலவை ரெடி. புளிக்க வைத்திருக்கும் அறுபதாம் குருவை மாவில் சிறிது தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்தில் கரைத்து சூடான தோசைக்கல்லில் தோசையாக ஊற்றி அதன் மேல் பச்சைப்பட்டாணி கலவையை வைத்து சுற்றிலும் எண்ணெயை ஊற்றி மசால் தோசை போல் சுட்டு எடுத்து பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-06-2018

    18-06-2018 இன்றை சிறப்பு படங்கள்

  • 17-06-2018

    17-06-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramalanchennaifestival

    தமிழகம் உள்பட நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகை கொண்டாட்டம் : மசூதிகளில் சிறப்பு தொழுகை

  • DragonBoatTournament2018

    சீனாவில் உலகப்புகழ் பெற்ற டிராகன் படகு போட்டி: போட்டியை காண ஏராளமானோர் வருகை

  • fifa_wcer1

    2018 கால்பந்து உலகக் கோப்பை : உலக முழுவதும் ரசிகர்களை தொற்றிய கால்பந்து ஜுரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்