SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கத்தரிக்காய் சாதம்

2018-01-11@ 12:14:10

என்னென்ன தேவை?

உதிராக வடித்த சாதம் - 2 கப்,
கத்தரிக்காய் - 1,
தக்காளி - 3,
குடைமிளகாய் - 1,
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு,
அலங்கரிக்க வறுத்த வேர்க்கடலை - 1/4 கப்,
கொத்தமல்லித்தழை - தேவைக்கு.

பொடிக்கு...

காய்ந்த மிளகாய் - 4,
தேங்காய்த்துருவல் - 1/2 கப்,
தனியா - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்.

தாளிக்க...

கடுகு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,
லவங்கம், பட்டை - 2 சிறிய துண்டுகள்,
நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்,
கறிவேப்பிலை - 5 இலைகள்.


எப்படிச் செய்வது?

கத்தரிக்காய், தக்காளி, குடைமிளகாயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும். பொடிக்கு கொடுத்ததை கடாயில் எண்ணெய் இல்லாமல் தனித்தனியே வறுத்து ஆறவைத்து மிக்சியில் பொடித்துக் கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்த பொருட்களை தாளித்து, கத்தரிக்காய், தக்காளி, குடைமிளகாய் சேர்த்து வதக்கி, பொடித்த பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, சாதம் சேர்த்து கிளறி அடுப்பை நிறுத்தவும். வேர்க்கடலை, கொத்தமல்லித்தழையை தூவி பரிமாறவும்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-07-2018

    21-07-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • DryingClothingfestival

    சீனாவில் வருடாந்திர உலர்த்தும் ஆடை திருவிழா: பாரம்பரிய ஆடைகளை நெய்து விழாவை சிறப்பித்த பெண்கள்

  • unmanedbookshopchina

    சீனாவின் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மிகப்பெரிய ஆளில்லா புத்தக நிலையம் திறப்பு

  • newyork_steam_explosion

    நீராவி குழாய் வெடித்து சிதறியதில் புகை மண்டலமாக காட்சியளித்த நியூயார்க் நகரம்!

  • Apollo11NeilArmstrong

    நீல் ஆம்ஸ்ட்ராங் சந்திரனின் மேற்பரப்பில் கால்பதித்த தினம் இன்று: அரிய புகைப்படங்களின் தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்