SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சில்லி கார்லிக் வெஜிடபிள்

2018-01-11@ 12:10:51

என்னென்ன தேவை?

கேரட் - 50 கிராம்,
கோஸ் - 100 கிராம்,
பீன்ஸ் - 25 கிராம்,
வெங்காயம் - 1,
பச்சைமிளகாய் - 2,
குடைமிளகாய், ஸ்ப்ரிங் ஆனியன், பூண்டு, இஞ்சி - தலா 1 டேபிள்ஸ்பூன்,
மைதா, சோள மாவு - தலா 25 கிராம்,
சோயா சாஸ் - சிறிது,
காய்ந்தமிளகாய் விழுது - 1 டேபிள்ஸ்பூன்,
சர்க்கரை - சிறிது,
எண்ணெய், உப்பு, வெள்ளை மிளகுத்தூள், தக்காளி சாஸ் - தேவைக்கு.


எப்படிச் செய்வது?

வெங்காயம், கேரட், கோஸ், பீன்ஸ், குடைமிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொண்டு, மைதா, சோள மாவு, இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து, சூடான எண்ணெயில் முறுவலாக வறுத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெயை காயவைத்து நறுக்கிய இஞ்சி, பூண்டு, வெங்காயம், பச்சைமிளகாயை வதக்கி, காய்ந்தமிளகாய் விழுது, சோயா சாஸ், தக்காளி சாஸ், உப்பு, சர்க்கரை, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து கிளறி, சோள மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றி, வறுத்த காய்கள், ஸ்ப்ரிங் ஆனியன் போட்டு கிளறி சூடாக பரிமாறவும்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nationalpanchayat

    தேசிய பஞ்சாயத்து ராஜ் கூட்டம் : பிரதமர் மோடி பங்கேற்பு

  • turkey_building11

    துருக்கியில் பயங்கர நிலநடுக்கம் : 39 பேர் காயம் ; கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம்

  • saamiyarrape129

    சாமியார் ஆஸ்ராம் மீதான பாலியல் வழக்கு : நல்ல தீர்ப்பு வேண்டி ஆதரவாளர்கள் பிரார்த்தனை; 3 மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு

  • 25-04-2018

    இன்றைய சிறப்பு படங்கள்

  • ShangaiConstrutionBank

    ஊழியர்கள் இல்லை...ரோபோக்களை கொண்டு தானாக இயங்கும் வங்கி: சீனாவில் தொடக்கம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்