முதியோருக்கு ஏர் இந்தியா சலுகை
பதிவு செய்த நாள்
11/22/2009 12:37:18 AM
சென்னை : ஏர் இந்தியா உள்நாட்டு விமானங்களில் மூத்த குடிமக்களுக்கு 50 சதவீத கட்டணச் சலுகை அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 2010 மார்ச் 31 வரை ஏர் இந்தியா கவுன்டர்களில் வாங்கப்படும் டிக்கெட்களுக்கு இது பொருந்தும்.உள்நாட்டு விமானத் தில் எகானமி வகுப்பில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 சதவீத கட்டண சலுகை பெறலாம்.
வெளிநாடு செல்லும் விமானங்களில் முதல், உயர் வகுப்பில் 20 சதவீத சலுகை உண்டு.