SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறை முடிந்தும் களை கட்டும் திற்பரப்பு அருவி

2017-06-19@ 12:38:30

குலசேகரம் :  குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று திற்பரப்பு. மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கோதையாறு இங்கு அருவியாக விழுவதால் சீசன் என்றில்லாமல் ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக கோடையில் வறண்டு பயணிகளை ஏமாற்றி விடுகிறது. இதேபோன்று கடந்த ஏப்ரல், மே மாதங்களில் ஏற்பட்ட கடுமையான வறட்சியினால் கோதையாறு வறண்டு போனது. இதனால் திற்பரப்பு அருவியும் தண்ணீரின்றி காட்சியளித்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை, சாரல் மழையாக பெய்து வருகிறது. மலையோர பகுதிகள், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வதால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேலும் கடலோர பகுதிகளான தேங்காப்பட்டணம், மங்காடு, நித்திரவிளை போன்ற பகுதிகளில் தாமிரபரணி ஆறு வழியாக கடல் நீர் உட்புகுவதால் நிலத்தடிநீர் உப்பாக மாறி குடிநீர் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு சிற்றாறு 2 அணையிலிருந்து 30 கன அடி தண்ணீர் கோதையாறு வழியாக திறந்து விடப்பட்டு வருகிறது.

இதனால் திற்பரப்பு அருவியின் மேல்புறமுள்ள தடுப்பணை நிரம்பி வழிந்து வருகிறது. திற்பரப்பு அருவியும் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.
தமிழகத்தின் பல பகுதிகளில் மழை சீசன் துவங்காத நிலையில் வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. இதனால் மக்கள் நீர்நிலை சார்ந்த சுற்றுலாதலங்களை நாடி செல்கின்றனர். இதனால் திற்பரப்பு அருவியில் பயணிகள் வருகை அதிகரித்து கோடை விடுமுறை முடிந்த பின்னரும் சுற்றுலா களைகட்டி வருகிறது. காலை முதல் மாலை வரையிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்து வருகிறது.

வாகனங்கள் எண்ணிக்கை அதிகமாக வருவதால் நெருக்கடி நிலவி வருகிறது. குமரி மாவட்டத்தின் பிற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை குறைந்து வெயில் நிலவி வரும் நிலையில், திற்பரப்பில் வெயிலும் சாரல் மழையும் மாறி மாறி வந்து பயணிகளை குதூகலப்படுத்துகிறது. அருவியை சுற்றிலுமுள்ள பகுதிகள் மரங்கள் அடர்ந்து வனம் போல் இருப்பதால் இதமான தென்றல் காற்றும் வீசி வருகிறது. அருவியை சுற்றிலுமுள்ள பூங்காக்கள் தற்போது பராமரிக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் காட்சியளிக்கிறது.

அலங்கார நீரூற்று, சிறுவர் பூங்கா, நீச்சல் குளம் என எல்லா இடங்களும் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது. அருவியின் மேற்பரப்பிலுள்ள திற்பரப்பு தடுப்பணையில் நடைபெறும் உல்லாச படகு சவாரியில் பயணிகள் ஆர்வத்துடன் சென்று படகு சவாரி செய்து கோதையாற்றின் இருகரைகளிலும் உள்ள இயற்கை அழகை ரசித்து செல்கின்றனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்