SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை சீசன் காலத்தில் கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தை 4.5 லட்சம் பேர் பார்வையிட்டனர்

2017-06-19@ 12:37:20

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் பெரும்பாலும் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் மண்டபம் மற்றும் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகு மூலம் சென்று கண்டுகளிப்பதையே அதிக அளவில் விரும்புகின்றனர். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் பொதிகை, குகன், விவேகானந்தா என 3  படகுகள் இயக்கப்படுகின்றன.

தினமும் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இந்த படகுகள் மூலம் சுற்றுலா பயணிகள் அழைத்து செல்லப்படுகின்றனர். படகில் செல்ல ஒரு நபருக்கு சாதாரண கட்டணம் ரூ.34 வசூலிக்கப்படுகிறது. ஸ்பெஷல் கட்டணம் ரூ.169 என பூம்புகார் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இதே போல் விவேகானந்தர் மண்டபத்துக்கு நுழைவு கட்டணமாக ரூ.70 வசூல் செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் ஒன்றரை கோடி சுற்றுலா பயணிகள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் படகு சவாரி செய்துள்ளனர்.

கடந்த கோடை விடுமுறையில் கன்னியாகுமரிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். இதில் கிட்டத்தட்ட 4.5 லட்சம் பேர் படகுகள் மூலம் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை கண்டு களித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 214 பேர் வருகை தந்துள்ளனர். மே மாதத்தில் இது 2 லட்சத்து 58 ஆயிரத்து 952 பேர் என அதிகரித்துள்ளது.

மொத்தத்தில் கோடை விடுமுறையில் 4 லட்சத்து 46 ஆயிரத்து 166 பேர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் விவேகானந்தர் மண்ட பத்துக்கு சென்று திரும்பியுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 64 லட்சம் அதிகம். இதன்மூலம் 2 கோடியே 13 லட்சத்து 94 ஆயிரம் வருமானமாக கிடைத்துள்ளது. இத்தகவலை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக மேலாளர் சுடலைமுத்து தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரிக்கு இந்த ஆண்டு வருகைதந்த மொத்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறித்து சுற்றுலாத்துறை கணக்கெடுக்கவில்லை என தெரிகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது மவுனமே பதிலாக கிடைக்கிறது. சர்வதேச சுற்றுலா தலத்துக்கு வருகைதந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறித்து கணக்கெடுக்காதது பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

  • milkcenterchennai

    சென்னையில் 24 மணி நேர பால் விற்பனை மையம் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார்

  • 21-04-2018

    21-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்