SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலத்தில் 5வது நாளாக தொடரும் வெயில் மெயினருவியில் குளிக்க நீண்ட வரிசை

2017-06-19@ 12:35:44

தென்காசி : குற்றாலத்தில் தொடர்ந்து ஐந்து தினங்களாக சாரல் இல்லாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. விடுமுறை தினம் என்பதால் நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமிருந்தது. இதனால் மெயினருவி, ஐந்தருவியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் குளித்தனர்.

குற்றாலத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே சீசன் கண்ணாமூச்சி காண்பித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒட்டு மொத்த சீசன் காலத்திலும் சுமார் இருபது தினங்கள் மட்டுமே சாரல் காணப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜூன் முதல் தேதி மிகச்சரியாக சீசன் துவங்கியதுடன் சுமார் பத்து தினங்கள் தொடர்ந்து சாரல் பெய்தது. இதனால் இந்த ஆண்டு சீசன் கை கொடுக்கும் என்று எண்ணிய நிலையில் கடந்த ஐந்து தினங்களாக சாரல் மறைந்து வெயில் அடித்து வருகிறது. குறிப்பாக நேற்று வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.

தொடர்ந்து சாரல் இல்லாததுடன், வெயிலும் காணப்பட்டதால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் சுமாராகவும், பெண்கள் பகுதியில் குறைவாகவும் விழுகிறது. ஐந்தருவியில் இரண்டு பிரிவுகளில் ஓரளவு நன்றாகவும், இரண்டு பிரிவுகளில் குறைவாகவும் விழுகிறது. புலியருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றில் பாறையை ஒட்டி சிறிதளவு தண்ணீர் விழுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • salemchennairoad

    பொதுமக்கள் எதிர்ப்பு மீறி நடைபெறும் சேலம் - சென்னை 8 வழிச்சாலை திட்டம் : விளை நிலங்கள் அழியும் அபாயம்!

  • icffactorychennai

    சென்னை ஐசிஎஃப் தொழிற்சாலையில் ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் ஆய்வு

  • RaghulGandhi48thBday

    ராகுல் காந்தியின் 48வது பிறந்தநாளையொட்டி நாடு முழுவதும் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்

  • IndonesiaTobaLake

    இந்தோனேஷிய ஏரியில் 80 பேரை ஏற்றி கொண்டு சென்ற படகு கவிழ்ந்து விபத்து: ஒருவர் பலி, பலர் மாயம்

  • KiteWarPalestine

    பட்டத்தில் தீவைத்து இஸ்ரேல் மீது புதுவிதமாக தாக்குதல் நடத்திய பாலஸ்தீனர்கள்: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்