SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சாரல் இல்லாதபோதும் குற்றால அருவிகளில் தண்ணீர் தாராளம்

2017-06-16@ 15:59:30

தென்காசி : குற்றாலத்தில் இரண்டு நாட்களாக சாரல் இல்லாதபோதும் அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. குற்றாலத்தில் இந்த ஆண்டு சீசன் குறித்த காலத்தில் துவங்கி அனைத்து அருவிகளிலும் தண்ணீர் பரவலாக விழுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக குற்றாலத்தில் சாரல் இல்லை. வெயிலும் சுள்ளென்று சுட்டெரிக்கிறது.

இருப்பினும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் நன்றாக விழுகிறது. மாலையில் சற்று இதமான காற்று வீசுகிறது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் தண்ணீர் சுமாராக விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஒரு பிரிவில் சுமாராக விழுகிறது. புலியருவி, பழையகுற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுகிறது. சுற்றுலா பயணிகள் கூட்டமும் சுமாராகவே உள்ளது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • siccoarSTUCKinachild

    விளையாட்டால் விபரீதம் : 2 வயது குழந்தையின் நெற்றியில் மாட்டிய கத்தரிக்கோல் அறுவைசிகிச்சைக்கு பிறகு அகற்றம்

  • chiLDSIwisjhh

    மாணவரின் எஸ்ஐ ஆசையை நிறைவேற்றிய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன்

  • 19-08-2017

    19-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • biharBRIDGEcollapse

    பாலத்தை கடக்கும் முன் பாதியிலேயே இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழப்பு..!

  • assamRFGBIHARflood

    வெள்ளத்தில் மிதக்கும் பீகார், அசாம் மாநிலங்கள் : லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்