SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மதியம் ‘சுள்’ வெயில், மாலையில் ‘இதமான சூழல்’ குற்றாலத்தில் நெரிசலின்றி குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

2017-06-14@ 14:28:30

தென்காசி : குற்றாலத்தில் நேற்று மதியம் சுள்ளென வெயில் அடித்த நிலையில், மாலையில் இதமான சூழல் நிலவியது. அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வரிசையின்றி நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில், இந்தாண்டு ஜூன் முதல் தேதியே சீசன் துவங்கியது. ஒருவாரத்தில் அருவிகளில் தண்ணீர் குறைந்த நிலையில், 2 நாட்களில் சீசன் மீண்டும் களை கட்டியது. நேற்று காலையில் சாரல் பெய்த நிலையில், பகல் முழுவதும்  வெயில் காணப்பட்டது.

மாலையில் காற்றுடன் மீண்டும் இதமான சூழல் நிலவியது. மெயினருவியில் ஆண்கள் பகுதியில் நன்றாகவும், பெண்கள் பகுதியில் சுமாராகவும் தண்ணீர் கொட்டியது. ஐந்தருவியில்  நான்கு பிரிவுகளில் தண்ணீர் மிதமாக விழுகிறது. பழைய குற்றாலம், புலியருவியில்  தண்ணீர் குறைவாக விழுகிறது. வேலை நாள் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டமும் குறைவாகவே காணப்பட்டது. இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வரிசையின்றி நீண்ட நேரம் குளித்து மகிழ்ந்தனர்.

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்