SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவை குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-06-05@ 16:36:52

கோவை : கோடை விடுமுறை கொண்டாட கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் நேற்று குவிந்தனர். மேற்குதொடர்ச்சி மலை சாடிவயல் பகுதியில் கோவை குற்றாலம் அமைந்துள்ளது. கோடை விடுமுறை துவங்கியது முதல் இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. சுற்றுலா பயணிகளை கவர வனத்துறையினர் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 

கூடுதல் வாகன வசதி போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும், கோவை குற்றாலத்தில் கோடை மழையினால் அருவியில் தண்ணீர் வரத்து இருந்தது. இதனால், குற்றாலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். கோடை விடுமுறையின் கடைசி ஞாயிறு என்பதால் நேற்று காலை முதல் அதிகளவிலான பேர் கார், இருசக்கர வாகனம், பேருந்து மூலமாக குற்றாலத்தில் குவிந்தனர்.

கோவை குற்றால பகுதியில் வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று மட்டும் குற்றாலத்தில் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால், வனத்துறையினருக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் கிடைத்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • bangla_train_crash11

    வங்கதேசத்தில் பாலம் இடிந்து விழுந்ததால் ரயில் கவிழ்ந்து விபத்து : 5 பேர் பலி, 100 பேர் காயம்

  • athibar_northkoreaa11

    14 ஆண்டுகளுக்கு பின் சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின் காட்சித் தொகுப்பு

  • thaneer_laari_kudam11

    குடிநீர் பஞ்சம் எதிரொலி : 'குடம் இங்கே, தண்ணீர் எங்கே?’.. தமிழக அரசை கண்டித்து ஸ்டாலின் தலைமையில் திமுக ஆர்ப்பாட்டம்

  • kali_dogsa1

    கலிபோர்னியாவில் அழகற்ற நாய்களுக்கான போட்டி : 19 நாய்கள் பங்கேற்பு

  • firoilsuthigari11

    அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த தீ : மாபெரும் போராட்டத்திற்கு பின் அணைப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்