SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை நிறைவடைவதால் மேட்டூர் அணை பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

2017-06-05@ 12:14:30

மேட்டூர் : பள்ளி, கல்லூரி விடுமுறை நிறைவடைவதால், கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று மேட்டூர் அணை பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், கர்நாடக மாநிலம் கொள்ளேகால், மாதேஸ்வரன் மலை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.

வழக்கத்தைவிட நேற்று பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்திருந்தனர். அணைக்கட்டு முனியப்பன் சாமியை தரிசித்துவிட்டு பூங்கா அருகிலேயே சமைத்தனர். பின்னர் பூங்காக்குள் கொண்டு சென்று குடும்பத்துடன் உணவு உண்டு மகிழ்ந்தனர். கத்திரி வெயில் முடிந்த நிலையில், மேட்டூரில் நேற்று கடுமையான வெப்பம் நிலவியது.

இதனால் அண்ணா பூங்கா மரத்தடியில் உள்ள புல்தரையில் அமர்ந்து சுற்றுலாபயணிகள் பொழுதை கழித்தனர். சிறுவர் பூங்காவில், குழந்தைகளுடன் பெரியவர்களும் ஊஞ்சலாடி மகிழ்ந்தனர். மேலும் மீன்காட்சி சாலைக்கு சென்று பல்வேறு வகையான மீன்களை கண்டுகளித்தனர்.

இதையடுத்து பாம்பு பண்ணை, மான் பூங்கா ஆகியவற்றுக்கு சென்று அரிய வகை பாம்புகளையும், மான்களையும் குழந்தைகளுடன் கண்டு ரசித்தனர். வெயிலின் தாக்கம் நேற்று வழக்கத்தைவிட அதிகளவில் இருந்ததால், சுற்றுலா பயணிகள் மாலை வரை பூங்காவில் அமர்ந்திருந்தனர். இதனால் அணை பூங்கா திருவிழா போல் காட்சியளித்தது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-08-2019

    17-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flower16

    பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் டவுன் ஹாலில் நடைபெற்ற ஃப்ளவர் டைம் கண்காட்சி: புகைப்படங்கள்

  • tightropewalker

    நதியின் மேல் 115 அடி உயரத்தில் கட்டப்பட்ட கயிற்றின் மீது நடந்து அசத்திய கலைஞர்: பார்வையாளர்கள் வியப்பு!

  • 16-08-2019

    16-08-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • delli_engottai11

    டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி : விழாக்கோலம் பூண்டது டெல்லி நகரம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்