SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விழா நிறைவடைந்தது மூன்று நாட்களில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு

2017-05-30@ 15:31:45

சேலம் : ஏற்காடு கோடை விழாவையொட்டி, கடந்த மூன்று நாட்களில் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். நிறைவு நாளான நேற்று, ஆரோக்கிய குழந்தைகள் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஏற்காடு 42வது கோடை விழாவை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 27ம் தேதி தொடங்கி வைத்தார்.

நேற்று மாலை நிறைவு விழாவையொட்டி ஏற்காடு அண்ணா பூங்காவில் மலர் கண்காட்சியை ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள், கண்டு ரசித்தனர். இதேபோல், படகு இல்லம், மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாய்ண்ட், சேர்வராயன் கோயில், ரோஜா தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் சுற்றி பார்த்தனர்.

சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் சென்னை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து கடந்த 3 நாட்களாக வாகனங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர். சேலம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து கடந்த 3 நாட்களாக 40 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக, கடந்த 3 நாட்களில்  மட்டும் சுமார் 2 லட்சம் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழாவின் இறுதி நாளான நேற்று, அண்ணா பூங்கா, படகு இல்லம், மான் பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வெளியூர் பயணிகள் பலர் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் பங்கேற்கும் வகையில், பெண்களுக்கான கோலப்போட்டி, பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டி, ஆரோக்கிய குழந்தை போட்டி, மழலையர் நடை போட்டி ஆகியவை நடத்தப்பட்டது.

ஆரோக்கிய குழந்தை போட்டியில் பங்கேற்ற 31 குழந்தைகளில் ஏற்காடு மிதுன் சரவணன் முதலிடம், சர்வேஸ் இரண்டாம் இடம், பிரின்ஷா மூன்றாம் இடம் பிடித்தனர். 3 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான நடை போட்டியில், ஏற்காடு பிரணவ் முதலிடம்,  குருபிரசாத் 2ம் இடம், சுஜித்சிங் 3ம் இடம் பிடித்தனர். சிறுமிகள் பிரிவில் நேத்திகா முதலிடம், ரக்‌ஷயா 2ம் இடம், ஜாஸ்லின் 3ம் இடம் பெற்றனர்.

பாரம்பரிய உணவு சமைக்கும் போட்டியில், 25 பெண்கள் கலந்து கொண்டு பலவிதமான உணவு வகைகள் தயாரித்து அசத்தினர். இவர்களில், ஏற்காடு வினிதா முதலிடம் பெற்றார். சுமதி 2ம் இடம், மலர் ஓவியம் 3ம் இடம் பிடித்தனர். கோலப்போட்டியில் ஏற்காடு மனோன்மணி முதல் பரிசும், சியாமளா 2ம் பரிசும், வனிதா குறிஞ்சிமலர், ஜெயந்தி ஆகிய இருவரும் 3ம் பரிசும் வென்றனர். இவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மாலையில், ஏற்காடு கலையரங்கத்தில் நடந்த நிறைவு விழாவில் கலெக்டர் சம்பத் தலைமையில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • sachinbday

  46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

 • fingersgirl

  அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

 • 24-04-2019

  24-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

 • vote

  3-வது கட்ட மக்களவைத் தேர்தல்: 14 மாநிலங்களில் உள்ள 117 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நிறைவடைந்தது

 • hailstrom

  தெலுங்கானாவில் நேற்று திடீரென பெய்தது ஆலங்கட்டி மழை: இணையதளத்தில் வைரலாகும் காட்சிகள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்