SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

கோடை விடுமுறையையொட்டி அணை, அவதானப்பட்டி பூங்காவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர் குழந்தைகள் குதூகலம்

2017-05-29@ 14:02:14

கிருஷ்ணகிரி :  கோடை விடுமுறை நிறைவடையும் வேளையில் கிருஷ்ணகிரி அணை மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.  பள்ளிகளுக்கு கடந்த 1ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்ததால் பகல் நேரத்தில் வெளியே வர முடியாத நிலை இருந்தது. இதனால், விடுமுறை விடப்பட்டும் பள்ளி மாணவ, மாணவிகள் வீடுகளிலேயே முடங்கி கிடந்தனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருவதால், பூமி குளிர்ச்சியடைந்துள்ளது. நேற்றுடன் அக்னி நட்சத்திரமும் முடிவுக்கு வந்ததால் வெப்பம் குறைந்து இதமான காற்று வீசியது. கோடை விடுமுறை முடியும் தருவாயில், வார விடுமுறை தினமான நேற்று அந்தந்த பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட மக்களின் பொழுது போக்கு அம்சமாக கிருஷ்ணகிரி அணை பூங்கா மற்றும் அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லம் மட்டுமே உள்ளது.

கோடை விடுமுறை முடிய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் பள்ளி மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர்களுடன் நேற்று கிருஷ்ணகிரி அணை பூங்கா, அவதானப்பட்டி சிறுவர் பூங்கா, படகு இல்லங்களில் குவிந்தனர். மேலும் பூங்காவில் உள்ள ஊஞ்சல், சறுக்கு பலகைகளில் விளையாடியும், படகுகளில் சவாரி செய்தும் குழந்தைகள் குதூகலித்தனர். அணை பகுதியில் மீன் விற்பனையும் அமோகமாக நடந்தது.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

மருத்துவம்

Medical Trends கைகளின் வலி
Like Us on Facebook Dinkaran Daily News
  • dogsketc_123amer

    பனிச்சறுக்கு விளையாடும் உலகின் முதல் நாய் : வியக்க வைத்த பென்னி !

  • thailandbirdsing

    தாய்லாந்தில் நடைபெற்ற பறவைகள் பாடும் போட்டி : ஆயிரக்கணக்கான பறவைகள் பங்கேற்பு

  • presimodhi_madhya123

    மத்தியப் பிரதேசத்தில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் : பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

  • bandh_inwest123

    மேற்கு வங்காளத்தில் முழு அடைப்பு போராட்டம் - பல இடங்களில் ரயில் மறியல் !

  • israel_newfasttrain

    இஸ்ரேலில் அதிவேக இரயில் திறப்பு - மக்கள் உற்சாகம் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்