SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

Urban Tree

ஏற்காட்டில் திரண்ட சுற்றுலா பயணிகள்

2017-05-24@ 13:58:03

ஏற்காடு :  பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்ததால் ஏற்காடு களைகட்டியது. ஏற்காட்டில் வருகிற 27, 28ம் தேதிகளில் மலர்காட்சி மற்றும் கோடை விழா நடத்தப்படுகிறது. இதற்காக ஏற்காடு அண்ணா பூங்காவில் ஜினியா, மினி ஜெனியா, ப்ளாக்ஸ், கோலியாஸ், ப்ளாக்ஸ், வின்காரோசியா, சால்வியா, சால்வியா குவார்க், பேன்சி, மேரிகோல்டு, ஃப்ரன்சி மேரிகோல்டு, டேலியா, ஹைட்ரான்ஜியா, ஸ்பெத்திபெல்லம், கிரைசாந்தியம், ஆல்ஃபா, உள்ளிட்ட வகைகளில் 11 ஆயிரம் பூச்செடிகள் தயார் செய்யப்பட்டு வரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோடை விடுமுறை என்பதால், ஏற்காட்டில் நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள், பல்வேறு சுற்றுலா தலங்களை சுற்றி பார்த்துவிட்டு அண்ணா பூங்காவில் மலர்காட்சிக்காக தயார் செய்யப்பட்டு வரும் பூச்செடிகளை ஆர்வத்துடன் கண்டு களித்தனர். மேலும், பூங்காவில் குடும்பத்துடன் பொழுது போக்கி மகிழ்ந்தனர். அண்ணா பூங்காவில் நீண்ட நாட்களாக பழுதடைந்திருந்த ஜப்பான் பூங்கா நீர்வீழ்ச்சி சரி செய்யப்பட்டுள்ளது, குழந்தைகளை பெரிதும் கவர்கிறது.

முதல்வர் வருகைக்காக புதுப்பிக்கப்படும் சாலை

கோடை விழாவிற்காக ஏற்காட்டில் பல்வேறு சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. நேற்று ஏற்காடு படகு இல்லம் வழியாக ஜெரீனா காடு வரை ரூ.20 லட்சம் மதிப்பில் சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இது பற்றி பொதுமக்கள் கூறுகையில், ‘ஏற்காட்டில் பல்வேறு சாலைகள் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதை சரி செய்ய பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது முதல்வர் வருகைக்காக, துரிதகதியில் சாலை சீரமைக்கப்படுகிறது. அதே போல் அனைத்து சாலைகளையும் சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mumbai_1010ganeshidole

    மும்பையில் கோலாகலமாக நடைபெற்ற விநாயகர் ஊர்வலம் - ஆயிரக்கணக்கான சிலைகள் கரைப்பு

  • sikimairportmodi

    சிக்கிம் மாநிலத்தின் முதல் விமான நிலையம் : பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்

  • puppies_formation12345

    சிலியில் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற காவல்துறை நாய்க்குட்டிகள் !

  • philipines_landslidesaccid

    பிலிப்பைன்ஸ் நாட்டில் மீண்டும் நிலச்சரிவு - 29 பேர் உயிரிழப்பு !

  • tanzinaship_accid2121

    டான்ஸானியாவில் படகு விபத்து - உயிரிழந்தோர் எண்ணிக்கை 136 ஆக அதிகரிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்