SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியில் மலர் கண்காட்சி தொடங்கியது கொய் மலர்களால் மாமல்லபுரம் கடற்கரை சிற்ப அலங்காரம் ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

2017-05-19@ 15:27:06

ஊட்டி - ஊட்டியில் உள்ள நூற்றாண்டு புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி இன்று துவங்கியது. பல ஆயிரம் கொய் மலர்களாலான மாமல்லபுரம் கடற்கரை சிற்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இவற்றை ஏராளமான சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். நீலகிாி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கோத்தகிரியில் காய்கறி கண்காட்சி, ஊட்டியில் ரோஜா கண்காட்சி, கூடலூாில் வாசனை திரவிய கண்காட்சி ஆகியவை முடிவடைந்தன. இந்நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 3 நாள் நடக்கும் மலர் கண்காட்சிக்காக பூங்கா பொலிவுப்படுத்தப்பட்டு பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்ட பல்வேறு ரகங்களில் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன.

மலர் கண்காட்சியையொட்டி பல ஆயிரம் கொய்மலர்களை கொண்டு மாமல்லபுரம் பல்லவர் கால கடற்கரை சிற்ப அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது. ரோஜா மலர்களாலான இருவாட்சி பறவை அலங்காரம், பல வண்ண மலர்களை கொண்டு அலங்கார வளைவு உட்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. இது தவிர மலர் தொட்டிகளை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தது. மேலும், பல்வேறு மலர் இதழ்களை கொண்டு வண்ணமயமான ரங்கோலி அமைக்கப்பட்டிருந்தது.

பெரிய புல் மைதானத்தில் மூன்று இடங்களில் மலர் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து. அதேபோல், அங்குள்ள மரங்களை சுற்றிலும் மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்த்து., நுழைவு வாயில் பகுதியில் இருந்து பல ஆயிரம் மலர்களை கொண்டு பிரமாண்ட அலங்கார வளைவுகளும் அமைக்கப்பட்டிருந்தது.

இதன் துவக்க விழா இன்று காலை 9 மணிக்கு நடந்தது. வேளாண்துறை அமைச்சர் துரைகண்ணு தலைமை தாங்கினார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மலர் கண்காட்சியை துவக்கி வைத்தார்.  மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. கோவையில் இருந்து ஊட்டிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 14-12-2017

    14-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 80thNanjingMassacre

    நான்ஜிங் படுகொலை செய்யப்பட்ட 80வது நினைவு தினம் சீனாவில் அனுசரிப்பு

  • parliament_attacs

    நாடாளுமன்ற தாக்குதலின் 16வது ஆண்டு நினைவு தினம் : உயிர்நீத்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி

  • therthal_ujarath11

    குஜராத்தில் ஓய்ந்தது தேர்தல் பிரச்சாரம் : நாளை வாக்குப்பதிவு ; 22 ஆண்டுகால ஆட்சியை தக்கவைக்குமா பாஜக ?

  • DougJonesvictory

    அலபாமா செனட் உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் டக் ஜோன்ஸ் அபார வெற்றி: ஆதரவாளர்கள் உற்சாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்