SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஊட்டியில் படகு போட்டி சுற்றுலா பயணிகள் பங்கேற்பு

2017-05-17@ 12:31:31

ஊட்டி : ஊட்டியில் சுற்றுலாத்துறை சார்பாக ஊட்டி படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், கேடையங்களும் வழங்கப்பட்டன. ஆண்டுதோறும் கோடை காலத்தின் போது ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க பல்வேறு போட்டிகள், கண்காட்சிகள் ஆகியவை நடத்தப்படுகிறது. சுற்றுலாத்துறை சார்பாக ஊட்டி படகு இல்லத்தில் ஆண்டு தோறும் படகு போட்டிகள் மற்றும் படகு அலங்கார போட்டிகள் ஆகியன நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான படகு போட்டிகள் நேற்று ஊட்டியில் உள்ள ஏரியில் நடந்தது. இதில், சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கலந்துக் கொண்டனர். நேற்று நடந்த போட்டிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரபாண்டியின் துவக்கிவைத்தார். பெண்களுக்கான போட்டியில், கரூரை சேர்ந்த கவிதா மற்றும் கல்பனா ஜோடி முதல் இடத்தையும், கோவையை சேர்ந்த ஜீவிதா மற்றும் தேவி ஆகியோர் இரண்டாம் இடத்தையும், ஊட்டியை சேர்ந்த ஷோபிகா மற்றும் கவுசல்யா ஆகியோர் முன்றாம் இடத்தை பிடித்தனர்.  

ஆண்கள் இரட்டையர் பிரிவில், நாகப்பட்டினத்தை சேர்ந்த சிவக்குமார் மற்றும் சம்பத்குமார் முதலிடம் பிடித்தனர். திருப்பூர் ரமேஷ்கிருஷ்ணன் மற்றும் ஜீவா ஜோடி இரண்டாம் இடத்தையும், அருவங்காடு நவநீதன் மற்றும் சம்பத் ஆகியோர் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.
 
கலப்பு இரட்டையர் பிரிவில், சென்னையை சேர்ந்த ரமேஷ் மற்றும் காந்திமதி ஜோடி முதலிடம் பிடித்தது. ஊட்டியை சேர்ந்த பாபு, சுபாஷினி ஜோடி இரண்டாம் இடத்தையும், ஊட்டியை சேர்ந்த முகமது இப்ராஹிம் மற்றும் ரஷ்யபானு ஜோடி மூன்றாம் இடத்தையும் படித்தனர். தொடர்ந்து படகு ஓட்டும் ஊழியர்களுக்கான போட்டிகள் நடந்தது. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சுற்றுலாத்துறை மூலம் கேடயங்கள் வழங்கப்பட்டது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 25-05-2017

    25-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • californiaHIGHsurINHIGHWAY

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர நிலச்சரிவு - நெடுஞ்சாலையின் ஒரு பகுதி முற்றாக சேதம்

  • seADEGRESEDbusywork

    புதுவையில் துறைமுகம் அமைப்பதற்காக ஒப்பந்தம் போடப்பட்டுள்ள நிலையில், கடலுக்குள் தூர்வாரும் பணி மும்முரம்

  • 500METREGLASSslideINchina

    சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் சீனாவில் மஞ்சள் ஆறு மீது 500 மீட்டர் நீளமுள்ள கண்ணாடி சறுக்கு அமைப்பு

  • police_vehicless1

    போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்தன

மருத்துவம்

ஜாலியா ஒரு எக்சர்சைஸ் இவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்