SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறையையொட்டி ஆழியாரில் குவிந்த சுற்றுலா பயணிகள் குரங்கு அருவிக்கு வந்தவர்கள் ஏமாற்றம்

2017-05-15@ 14:31:06

பொள்ளாச்சி : கோவை மாவட்டம், பொள்ளாச்சியை அடுத்த சுற்றுலா இடமான ஆழியாருக்கு உள்ளூர் சுற்றுவட்டார பகுதியிலிருந்தும் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், பழனி, கேரளா உள்பட வெளியூர்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதில் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் இருக்கும்.
 
ஆழியாருக்கு வரும் பயணிகள் அணையின் நீர்தேக்க பகுதியை பார்வையிட்டு பின், பூங்காவிற்கு சென்று குடும்பத்துடன் பொழுதை கழிக்கின்றனர். மேலும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை படகு சவாரி செய்து மகிழ்கின்றனர். இதில், கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அந்நேரத்தில் ஆழியார் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக காணப்பட்டது.
  
இந்நிலையில் கடந்த சில வாரமாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஆழியார் அணையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகளவில் இருந்தது. இங்கு வந்த சுற்றுலா பயணிகள், பல மணிநேரம் பூங்காவில் பொழுதை கழித்தனர். நேற்று மதியம் முதல் பலத்த காற்று வீசியதால் அணையில் படகு சவாரி திடீரென ரத்து செய்யப்பட்டது.

சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்கள் பூங்கா அருகே உள்ள ரோட்டோரத்தில் வரிசை கட்டி நிறுத்தப்பட்டிருந்தன. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் இருந்ததையடுத்து, ஆங்காங்கே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பொழிந்த கனமழையால் குரங்கு அருவிக்கு தண்ணீர் வரும் என்று சுற்றுலா பயணிகள் வர துவங்கினர். ஆனால் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து எதிர்பார்த்த அளவில் இல்லாமல் குறைந்தளவே காணப்பட்டது.

ஒருபகுதியில், நூல்போன்று தண்ணீர் கொட்டி பெரும்பகுதி வெறும் பாறையாக உள்ளது. இதன் காரணமாக ஆழியாருக்கு வரும் சுற்றுலா பயணிகள் குரங்கு அருவியில் தண்ணீர் இல்லாததை கண்டு ஏமாற்றமடைகின்றனர். நேற்று விடுமுறை நாள் என்பதால் உள்ளூர் மற்றும் கேரளா பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகள் வருகை அதிகளவில் காணப்பட்டனர். இருப்பினும் குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து ஒரு பகுதியில் மட்டும் லேசாக வருவதையறிந்து, அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • flood

  அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

 • karnatakabuildingcollapse

  கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

 • texas

  டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

 • camelrace

  எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

 • holifestivel

  வடமாநிலங்களில் வண்ணப்பொடிகளை பூசி ஹோலி பண்டிகை உற்சாகமாக கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்