SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரோஜா கண்காட்சியை காண ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது

2017-05-15@ 12:29:08

ஊட்டி : ஊட்டி கோடைவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரோஜா கண்காட்சி துவங்கியுள்ளது. இந்த கண்காட்சியை காண கடந்த இரண்டு நாட்களாக ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதால் நகரம் முழுவதும் மக்கள் வெள்ளமாக காட்சியளித்தது. இதனால் நகாில் வாகன நொிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைந்தனர்.
 
நீலகிாி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டியுள்ள நிலையில், விடுமுறையை கொண்டாடுவதற்காக ஊட்டியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரோஜா கண்காட்சி நேற்று முன்தினம் ஊட்டி ரோஜா பூங்காவில் துவங்கியது. இந்த கண்காட்சியிைன காண ஏராளமான சுற்றுலாபயணிகள் ஊட்டியை முற்றுகையிட்டனர்.

ரோஜா பூங்கா மட்டுமின்றி, பிற சுற்றுலா தளங்களிலும் நேற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. ஒரே சமயத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்கள் வாகனங்களில் நகருக்குள் வந்ததால் எட்டின்ஸ் சாலை, கமர்சியல் சாலை, மார்கெட் சாலை, ரோஜா பூங்கா செல்லும் சாலைகளில் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது.
 
ஊட்டி - குன்னுார், ஊட்டி - கோத்தகிாி சாலைகளிலும் போக்குவரத்து நொிசல் ஏற்பட்டது. பஸ் போன்ற வாகனங்கள் நகருக்குள் வந்தால் கடும் போக்குவரத்து ெநாிசல் ஏற்படும் என்பதால், கனரக வாகனங்கள் நகருக்கு ெவளியே அமைக்கப்பட்டிருந்த பார்க்கிங் தளத்தில் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சர்க்கியூட் பஸ்கள் மூலம் சுற்றுலா தளங்களுக்கு பயணிகள் சென்றனர்.

ரோஜா கண்காட்சியை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகாிப்பால் ஊட்டியில் உள்ள லாட்ஜ்கள், காட்டேஜ்கள் நிரம்பி வழிந்தன. இதனால் அறைகள் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதால் வாகனங்கள் மூலம் ஊட்டிக்கு வந்த பெரும்பாலான சுற்றுலா பயணிகள் மாலையில் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • commissioner_chni_open

    சென்னையில் காவலர்களுக்கான பல்பொருள் அங்காடி: கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் திறந்து வைத்தார்

  • vina_prasanna_1

    சன்டிவி, தினகரன் வழங்கும் விநாயகர் பரிசுத் திருவிழா : வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் கருணாஸ், பிரசன்னா பரிசுகள் வழங்கினர்

  • KanthaShashtifestival

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா துவங்கியது

  • naagai_depott

    பொறையாரில் போக்குவரத்து ஊழியர் ஓய்வு அறை இடிந்து 8 பேர் பலி

  • 20-10-2017

    20-10-2017 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்