SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குற்றாலம் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்தது நீண்ட வரிசையில் நின்று குளித்த சுற்றுலா பயணிகள்

2017-05-15@ 12:05:58

தென்காசி : குற்றாலம் அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்தாலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் வரிசையில் நின்று குளித்தனர். நெல்லை மாவட்டம் குற்றாலம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக 11ம் தேதி மெயினருவி, ஐந்தருவி ஆகியவற்றில் தண்ணீர் நன்றாக விழுந்தது. தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து விட்டது.

மெயினருவியில் ஆண்கள் பகுதியில் மட்டும் சுமாராக விழுகிறது. ஐந்தருவியில் நான்கு பிரிவுகளில் விழுந்த வந்த தண்ணீர், நேற்று ஆண்கள் பகுதியில் மட்டும் இரண்டு பிரிவுகளில் மிகவும் குறைவாக விழுகிறது. பெண்கள் பகுதியில் தண்ணீர் விழாததால் ஆண்கள் பகுதியிலேயே பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்தனர். தண்ணீர் குறைவாக விழுந்தாலும் நேற்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-08-2017

    24-08-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • starYRROSUSW

    சீனாவுக்கு கடத்த வீட்டில் நட்சத்திர ஆமை வளர்த்த வாலிபர் அதிரடி கைது

  • TripleTALAQ

    மும்முறை தலாக் கூறி விவாகரத்து பெறுவது செல்லாது! : உச்ச நீதிமன்ற அமர்வு வரலாற்று சிறப்பு தீர்ப்பு வழங்கியது

  • phiLDAYAVill42padukaYAM

    ஃபிலடெல்ஃபியாவில் ரயில் விபத்து : 42 பேர் படுகாயம்

  • tHREEboyresucedITALY

    பூகம்ப இடிபாடுகளுக்கிடையில் சிக்கி இருந்த 3 சகோதரர்கள் 15 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்