SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கும்பக்கரை அருவியில் தண்ணி வருது.. ஆனா குளிக்க முடியாது

2017-05-10@ 12:05:17

பெரியகுளம் : நீர் வரத்து இருந்தும் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதனால் சுற்றுலாப்பயணிகள் வருத்தம் தெரிவித்தனர். பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் பெய்யும் கனமழை காரணமாக அருவிக்கு நீர்வரத்து இருக்கும். கும்பக்கரை அருவி ரம்யமான இயற்கை சூழலில் அமைந்துள்ளதால், தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும்.

இந்நிலையில் பருவமழை இன்றி அருவி வறண்டு போய் காணப்பட்டதாலும், வனவிலங்குகள் ஆபத்து இருப்பதாலும் சுற்றுலாப்பயணிகள் அருவிக்கு செல்ல கடந்த 20ம் தேதி வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர் வரத்து உள்ளது. எனினும் வனத்துறையினர் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி மறுத்து வருகின்றனர். இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘ ஏற்கனவே அருவியில் நீர் இல்லாததால் குளிக்க தடை விதித்தனர். ஆனால் தற்ேபாது நீர்வரத்து இருந்தும் வனத்துறையினர் குளிக்க தடை விதித்துள்ளனர். இதனால் கோடை விடுமுறைக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப செல்ல வேண்டியுள்ளது. எனவே அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளிக்க வேண்டும்’’ என்றனர்.

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • crowd_thiruchendhuru11

    சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர் : சூரசம்ஹார நிகழ்ச்சியால் திருச்செந்தூர் விழா கோலம் பூண்டது

  • 14-11-2018

    14-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • kumbamelawork

    அலகாபாத்தில் 2019ம் ஆண்டிற்கான கும்பமேளா திருவிழா பணிகள் தொடக்கம்

  • karwasaathhus

    கணவரின் நலன் வேண்டி வட இந்திய பெண்கள் கொண்டாடும் கர்வா சாத் பண்டிகை

  • statuevisitors

    உலகின் மிக உயரமான சர்தார் படேல் சிலையை காண 5 நாட்களில் 75,000 பார்வையாளர்கள் வருகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்