SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மலைப்பகுதியில் மழை இல்லை வறண்டுகிடக்கும் கும்பக்கரை அருவி சுற்றுலா பயணிகளுக்கு தடை

2017-04-25@ 11:01:50

பெரியகுளம் : பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர் பெரியகுளம் அருகே 8 கி.மீ தொலைவில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கொடைக்கானல் மலையடிவாரத்தில் இயற்கை சூழலில் இந்த அருவி அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைவனப்பகுதி மற்றும் கொடைக்கானலில் பெய்யும் கனமழை காரணமாக இங்கு நீர்வரத்து இருக்கும். அருவி ரம்யமான சூழலில் அமைந்துள்ளதால் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் சுற்றுலாப்பயணிகள் வருகை இருக்கும். தற்போது மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாமல் வறண்டு காணப்படுகிறது.

இதனால் கும்பக்கரை அருவிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் வறண்டு காணப்படுகிறது. மேலும் வனவிலங்குகள் தண்ணீர் தேடி அடிக்கடி அருவிக்கு வருகின்றன. எனவே, அருவி வறண்டு காணப்படுவதாலும், வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பு கருதியும் அருவிக்கு சுற்றுலா பயணிகள் வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 22-09-2019

    22-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 21-09-2019

    21-09-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • aljemerss_nadai11

    உலக அல்ஜீமர்ஸ் தினம் : சேத்துப்பட்டு பசுமை பூங்காவில் மெமரி வாக் விழிப்புணர்வு நடைபயணம்

  • china20

    சீனாவின் நடைபெற்ற கருப்பொருள் ஒப்பனை தயாரிப்பு கண்காட்சி: அலங்காரப் பொருட்கள், பொம்மைகள் காட்சிக்கு வைப்பு

  • bo20

    ஆப்கானிஸ்தானில் மருத்துவமனை அருகே குண்டு வெடிப்பு: 20 பேர் பலி, 95 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்