SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோட்டைகள், குடைவரை கோவில்கள் என விழிகள் விரியும் விழுப்புரம் மாவட்ட சுற்றுலா

2017-04-24@ 16:38:15

தமிழகத்தில் விழுப்புரம் 2வது பெரிய மாவட்டம். தமிழகத்தின் தலை நகரான சென்னையில் இருந்து 162 கிமீ தொலைவில் விழுப்புரம் மாவட்டம் உள்ளது.  விழுப்புரம் அதிக அளவில் கோயில்கள் நிறைந்த மாவட்டம். சைவ, வைணவ, அத்வைத நெறிகளுக்கான குறியீட்டுத் தலங்கள் உள்ள மாவட்டமும் இது. சமண மதம் இந்த மாவட்டத்தில் தழைத்தோங்கியதற்கான அடையாளங்கள் இங்கு இன்றும் நாம் பார்க்க முடியும். இதை எல்லாம் கடந்து சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல இடங்கள் இந்த மாவட்டத்தில் உள்ளன.  

மயைலமான் திருமுடிக்காரி என்ற மன்னனின் முள்ளூர் மலை,  கல்வராயன் மலையும் இங்கு தான் உள்ளன. விழுப்புரம் வரலாறு : இந்த மாவட்டத்தின் பெரும்பகுதியானது கிபி 1ம் நூற்றாண்டு முதல் 4ம் நூற்றாண்டு வரை சோழர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. பல்லவ மன்னன் சிம்ம விஷ்ணு சோழர்களை வென்று இந்த பெரும் நிலப்பரப்பை கைப் பற்றிய பிறகு பல்லவர் ஆட்சியின் கீழ் வந்தது.

பின்னர் விஜயாலய சோழன் அதை மீட்டான். சோழருக்கு பிறகு ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்-1(1251) காலத்தில் பாண்டியர்கள் ஆளுகைக்கு வ ந்தது. அதற்கு பிறகு 1334 முதல் 1378 வரை முஸ்லிம்கள் கைவசம் இருந்தது. அதற்கு பிறகு விஜயநகர ஆட்சியின் கீழ் வந்தது. 1677க்கு பிறகு சத்ரபதி சிவாஜி செஞ்சிப் பகுதியை கைப்பற்றினான். அதன்பின் முகலாயர்கள் வந்தனர். அப்போது நுழைந்த பிரிட்டிஷ் மற்றும் பிரஞ்ச் தேசத்தினர் ஒப்பந்தம் செய்து கொண்டு அந்த பகுதியை ஆண்டனர். பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு கிழக்கிந்திய கம்பெனியின் வசம் வந்தது.

* விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ளது எசாலம் என்ற கிராமம். இதை ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திர சோழன் நிர்மாணித்தான். அதேபோல எண்ணாயிரம் கிராமத்தில் இரண்டு கோயில்களையும் கட்டினான். செஞ்சியில் இருந்து இந்த இரண்டு கிராமங்கள் 15 கிமீ தொலைவில் உள்ளது. திண்டிவனத்தில் இருந்து பஸ் வசதி உள்ளது.

* சுற்றுலாப் பயணிகளால் அதிகம் விரும்பப்படும் இடமாக இருப்பது செஞ்சி. இங்குள்ள கோட்டைகள் 13ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதுதான் செஞ்சிக் கோட்டை. பின்னர் தேஜ்சிங் ஆண்டதால் இந்த பகுதி மிகவும் பிரபலம் ஆனது. சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்பிச் செல்லும் இடமாக உள்ளது. இங்கு செல்ல விழுப்புரம், திண்டிவனம் பகுதிகளில் இருந்து பஸ் வசதி உள்ளது. திருவண்ணாமலையில் இருந்தும் பஸ்வசதி உள்ளது. இங்குள்ள பல இடங்கள் சுற்றுலாப் பயணிகளுக்கு மட்டுமல்ல, வரலாற்று ஆர்வலர்களுக்கு தீனிபோடும் .

* திண்டிவனத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், செஞ்சிக்கு கிழக்கே 10 கி.மீ. தொலைவிலும் ஜைனகாஞ்சி மாதா கோயில் பகுதி உள்ளது. இது திகம்பரர்களின் தலைமையிடமாக ஒரு காலத்தில் இருந்தது. இங்குள்ள இரு கோயில்களுள் பாறைகளை குடைந்து உருவாக்கப்பட்டவை. இதை குடைவரைக் கோயில்கள் என்பர். அதில் பாகுபலி, பரசவநாதா, ஆதிநாதா, மகாவீரர், அம்பிகா அக்ஷி சிலைகள் அழகாக செதுக்கப்பட்டுள்ளன. இது கிபி 9ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டவை.

அதேபோல செஞ்சியில் இ ருந்து 17 கி.மீ. தொலைவில் உள்ள மண்டகப்பட்டு. இங்கும் ஒரு குடைவரைக் கோயில் உள்ளது. இது மகேந்திர வரமன் உருவாக்கியது. அடுத்து செஞ்சிக்கு வடக்கே 2 கி.மீ. தொலைவில் உள்ளது சிறு மலைப் பகுதி. அங்கு 24 தீர்த்தங்கரர்கள் வடிவங்கள் ஒரே கல்லில் செலுதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில்வேறு எங்கும் போது ஒரே இடத்தில் ஒரே கல்லில் 24 தீர்த்தங்கரர்களும் இடம் பெறவில்லை என்பது இந்தபகுதியின் சிறப்பு.  செஞ்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை பார்வையிட குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது ஒதுக்க வேண்டும்.

* உளுந்தூர் பேட்டை மற்றும் திருக்கோயிலூருக்கு இடையே உள்ளது திருநறுங்கொண்டை கிராமம். இங்கும் சமணர்களின் குடைவரைக் கோயில் உள்ளது. அடுத்து திருக்கோயிலூரில் பெண்ணை ஆற்றில் கபிலர் வடக்கிருந்து உயிர் நீத்த கபிலர் குன்று இருக்கிறது. இது தொல்பொருள் ஆய்வுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதுவும் பார்க்க வேண்டிய இடம்.

அருகில் 2வது வீரட்டான கோயில் உள்ளது. பெண்ணை ஆற்றின் மறு கரையில் அத்வைத்தை பரப்பிய ரகூத்தமரின் சமாதி அதாவது மூல பிருந்தாவனம் உள்ளது. அங்கிருந்து 5 கிமீ தொலைவில் ஞானானந்தர் வாழ்ந்த இடம் உள்ளது. உளுந்தூர் பேட்டையில் இருந்து கள்ளக்குறிச்சி செல்லும்  நெடுஞ்சாலையில் உள்ளது. தியாகதுருகம்.  

இங்கு  ஒரு சிறிய குன்று உள்ளது. அதன் உச்சியில் ஒரு குகையில் ஒரு சிறு  கிணறு உள்ளது. அது சிறியது என்றாலும் ஆழமானது. சூரிய ஒளியே படாத ஒன்று. இதை திப்பு சுல்தான் ஒரு சிறு கோட்டையை கட்டினார். அங்கு 3 பீரங்கிகளை நிறுவினார். அங்குள்ள குகைக்குள் தான் ஒரு கிணற்றை திப்பு உருவாக்கினார். அதில் சூரிய ஒளியே படாது. அந்த கிணறு எதிரிகள் கண்களுக்கு தெரியாத வகையில் அமைக்கப்பட்டது சிறப்பு. இன்றும் அந்த கிணற்றில் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருப்பதை பார்க்கலாம்.

- வி.புகழேந்தி

vivitrol shot information open naltrexone other names

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 08-12-2019

    08-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 07-12-2019

    07-12-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • RioStarFerrisWheel

    பார்வையாளர்களுக்காக விரைவில் திறக்கப்படவுள்ள ரியோ டி ஜெனிரோவின் பிரம்மாண்ட ராட்டினம்: வியப்பூட்டும் புகைப்படங்கள்

  • ambedh_day11

    இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம்: குடியரசுத்தலைவர், பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை!

  • SydneyOrangeSky19

    ஆஸ்திரேலிய வனப்பகுதியில் ஏற்பட்ட தீயின் புகையால் ஆரஞ்சு நிறமாக காட்சியளிக்கும் சிட்னி வான் பகுதி: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்