SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருவண்ணாமலை மாவட்டத்தில் கொளுத்தும் வெயிலால் சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய சாத்தனூர் அணை கடைகள், ஓட்டல்கள் வியாபாரமும் பாதிப்பு

2017-04-20@ 16:33:05

தண்டராம்பட்டு : வெயில் சுட்டெரித்து வருவதால் சாத்தனூர் அணை சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலமாக விளங்கி வருவது சாத்தனூர் அணை. இங்கு படகு குழாம், பூங்கா, முதலை பண்ணை உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்துசெல்கின்றனர்.

தற்போது தமிழகத்தில் 18 மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லவே அச்சமடைந்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் 109 டிகிரி வெயில் கொளுத்துகிறது. இதனால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து அனல் காற்று வீசுவதால் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாத்தனூர் அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

அணையில் மொத்த நீர் கொள்ளளவான 119 அடியில் தற்போது 76 அடி வரை மட்டுமே தண்ணீர் உள்ளது. கடந்த 2 தினங்களாக அதிகப்படியான வெயில் பதிவாகி வருவதால் சாத்தனூர் அணைக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதால் பெரும்பாலான இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. படகுகுழாம் பயன்படுத்த ஆட்கள் இல்லாததால் படகுகள் கரையில் ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப்பயணிகளின் வருகை குறைந்துள்ளதால் கடைகள், ஓட்டல்களின் வியாபாரமும் பாதிக்கப்பட்டுள்ளது.

naltrexone low dose depression open how to get naltrexone out of your system

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • chennai_ai11

    சென்னை சூப்பர் கிங்ஸ் 4 ரன் வித்தியாசத்தில் வெற்றி : நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

  • 23-04-2018

    23-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • Dinakaran_Education_Expo

    சென்னையில் தினகரன் நாளிதழின் கல்விக் கண்காட்சி கோலாகலமாக தொடங்கியது

  • mald123

    உலகிலேயே முதல்முறையாக கடலுக்கு அடியில் சொகுசுவிடுதி... மாலத்தீவில் நவம்பர் மாதம் திறப்பு!

  • Marijuana420Festival

    போதை பொருளான கஞ்சாவை, சட்டபூர்வமாக உபயோகிக்கும் 420 திருவிழா: உலகம் முழுவதும் கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்