SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை விடுமுறை தொடக்கம் கன்னியாகுமரியில் குவியும் சுற்றுலா பயணிகள்

2017-04-18@ 12:30:03

கன்னியாகுமரி : சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருகை தருகின்றனர். இங்கு நவம்பர் மாதம் 17ம்தேதி முதல் ஜனவரி 20ம் தேதி வரை சபரிமலை சீசன் காலமாகவும், ஏப்ரல், மே மாதங்கள் கோடை சீசன் காலமாகவும் கருதப்படுகிறது. இந்த சீசன் காலங்களில் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சியளிக்கும். கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயில், கடலில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் சூரியன் உதயம், மறைவு போன்றவை சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வருகிறது.

கன்னியாகுமரி வரும் சுற்றுலா பயணிகள் படகில் பயணம் செய்வதை அதிகம் விரும்பி வருவதால், படகுத்துறையில் டிக்கெட் வாங்க அதிகாலை முதலே நீண்ட வரிசை காணப்படுகிறது. திருவள்ளுவர் சிலைக்கு ரசாயன கலவை பூசும் முதற்கட்ட பணி தொடங்கியுள்ளதால், தற்போது அங்கு படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், சுற்றுலா பயணிகள் திருவள்ளுவர் சிலை பகுதிக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இது சுற்றுலா பயணிகளை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. மேலும், மாலை வேளைகளில் உள்ளூர் மக்களும் வருவதால் கன்னியாகுமரி களை கட்டுகிறது.

இந்நிலையில், கடற்கரை பகுதி வரை சுற்றுலா வாகனங்களை போலீசார் அனுமதிப்பதால் சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். வழக்கமாக, கன்னியாகுமரி ரவுண்டானா  வரை மட்டுமே சுற்றுலா வாகனங்கள் அனுமதிக்கப்படும். இதற்காக அப்பகுதியில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, வாகனங்கள் திருப்பி விடப்படும்.

ஆனால், தற்போது இந்த பேரிகார்டுகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. இதனால், சுற்றுலா வாகனங்கள் கடற்கரை பகுதிகளை ஆக்ரமித்துள்ளன. இதனால், சுற்றுலா பயணிகளால் கடற்கரை பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித்திரிந்து கடல் அழகையும், இயற்கை காற்றையும் ரசிக்க முடியவில்லை. மேலும், வாகன நெரிசலால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எனவே, சுற்றுலா பயணிகள் நலன்கருதி சுற்றுலா துறை, மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை கடற்கரை வரை அனுமதிக்காமல், ரவுன்டானா பகுதியில் தடுத்து உரிய இடங்களில் பார்க் செய்ய வலியுறுத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • bulletRAILCHINAsdrder

  மணிக்கு 400 கிமீ வேகத்தில் செல்லும் புதிய அதிவேக புல்லட் ரயில் சீனாவில் அறிமுகம்!

 • WaterONMARSMMANS

  செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருந்ததற்கான ஆதாரங்களை நாசாவின் ரோவர் கண்டுபிடித்துள்ளது

 • SPANfporestTREEDGT

  ஸ்பெயின் நாட்டில் ஏற்பட்ட காட்டு தீயினால் 150 ஏக்கர் வனப்பகுதி தீயில் எரிந்து சாம்பலானது

 • flood_kuttralam

  குற்றாலத்தில் தொடர் சாரலால் வெள்ளப்பெருக்கு : மெயினருவி, ஐந்தருவியில் குளிக்க தடை

 • ramzan_cheer

  நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்