SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடையிலும் குறைவின்றி தண்ணீர் கொட்டும் அகஸ்தியர் அருவி சுற்றுலாபயணிகள் அலைமோதல்

2017-04-17@ 12:59:07

வி.கே.புரம் :  பாபநாசம் அகஸ்தியர் அருவியில் கோடையிலும் குறைவின்றி தண்ணீர் கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதுகிறது. தமிழகம் முழுவதும் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவும் நிலையில், தற்போது கோடை வெயிலும் சுட்டெரிப்பதால் வீடுகளில் பொதுமக்கள் இருக்க முடியாத அளவிற்கு அனலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் கோடை விடுமுறையை கழிக்க சுற்றுலா தலங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நெல்லை மாவட்ட சுற்றுலா தலங்களிலும், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்த வண்ணம் உள்ளது. இங்குள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பல அருவிகள் உள்ளன. இதில் களக்காடு மலைப்பகுதியிலுள்ள அருவிகளில் மழைக் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும். குற்றாலத்திலுள்ள அருவிகளில் சீசன் காலங்களில் மட்டுமே தண்ணீர் விழும்.

ஆனால் பாபநாசம் அகஸ்தியர் அருவியில், ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் நெல்லை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் இருந்து சுற்றுலா பயணிகள் இங்கு வந்து ஆனந்தமாக குளித்து மகிழ்வார்கள். இந்த அருவிப்பகுதி வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் மாலை 5 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவதில்லை. அருவிக்கு குளிக்க வருபவர்கள் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் சோதனைக்கு பின்னர்தான் அனுமதிக்கப்படுகின்றனர். மதுபாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதற்கு அனுமதியில்லை.

தற்போது கோடை வெயில் கொளுத்தும் நேரத்திலும் அகஸ்தியர் அருவியில் குறைவின்றி தண்ணீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால் தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலா பயணிகள் அதிக அளவு வருகை தந்து ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். வரும் நாட்களில் அகஸ்தியர் அருவியில் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2017

    12-12-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • 10thexams_111

    10ம் வகுப்பு அரையாண்டு தேர்வுகள் தொடங்கியது

  • hardik_anivaguppu

    பாடிதாரின் கிளர்ச்சி தலைவர் ஹார்டிக் படேல் அகமதாபாத்தில் நடத்திய மாபெரும் மோட்டார் சைக்கிள் அணிவகுப்பு

  • rahulgandhi_11

    அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியின் அரசியல் வாழக்கையை எடுத்துரைக்கும் அரிய படங்கள்

  • kumari_ogi_puyal11

    ஓகி புயல் பாதிப்பிற்கு நிவாரணம் கேட்டு குமரி மீனவர்கள் கருப்புக்கொடிகளுடன் கடலில் இறங்கி மனித சங்கிலி போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்