SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோடை சீசனையொட்டி ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

2017-04-17@ 12:57:08

ஏற்காடு : ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காட்டுக்கு கோடை சீசனில் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வருவார்கள். தற்போது சீசன் தொடங்கியுள்ளதையடுத்து சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் வர தொடங்கியுள்ளனர். மேலும், பெங்களூருவில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தொடர் விடுமுறையையொட்டி கடந்த மூன்று நாட்களாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்குள்ள மான் பூங்கா, அண்ணா பூங்கா, மீன் காட்சியகம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் கோயில் பகுதிகளை ரசித்து வருகின்றனர். காலையிலும், மாலையிலும் இதமான குளிர் சீசன் நன்றாக உள்ளது. மதியம் சற்று வெயில் காணப்படுகிறது. தற்போது மக்கள் அதிகம் கூடும் ஏரிக்கரை, அண்ணா பூங்கா பகுதிகளில் தற்காலிக கடைகள் தோன்றியுள்ளது. இரவில் ஏற்காட்டில் தங்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.  

நேற்று பிற்பகல் திடீரென மழை பெய்தது. மழை அரை மணி நேரத்திற்கு மேல் பெய்ததால், சீதோஷ்ணம் குளிர்ச்சியாக மாறியது. இந்த சீசனையொட்டி, சேலம் போக்குவரத்து கோட்டத்தில் இருந்து கூடுதல் பஸ்களை இயக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். சேலம் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து,  ஏற்காட்டுக்கு செல்லும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப கூடுதலாக  பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும், ஏற்காடு கோடை விழா நடக்கும் போது, கூடுதலாக 30 பஸ்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

vivitrol shot information where to get naltrexone implant naltrexone other names

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-05-2017

    23-05-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennaiDISTRICTschool

    சென்னை மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் சோதனை

  • LIONGrabsmouthITWATER

    வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை திடீரென கடலுக்கு கவ்வி இழுத்த கடல்சிங்கம்

  • sworDMANdenoladTRUMP

    சவூதியில் வாள் நடனம் ஆடிய டொனால்ட் டிரம்ப்

  • wwriytten_jobbs

    தமிழகம் முழுவதும் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது

மருத்துவம்

ஜாலியா ஒரு எக்சர்சைஸ் இவற்றை அலட்சியப்படுத்தாதீர்கள்