SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கடற்கரை காந்தி சிலைக்கு கம்பிவேலி அமைப்பு சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

2017-04-03@ 14:48:46

புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் காந்தி சிலை அமைந்துள்ள பகுதியில் கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. இவ்விடத்தில் பாதுகாப்புக்காக இந்த கம்பிவேலி அமைக்கப்பட்டாலும், குழந்தைகள் உள்ளிட்ட சுற்றுலா பயணிகள் இந்த நடவடிக்கையால் ஏமாற்றம் அடைவார்கள் என பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். புதுச்சேரியின் அடையாளமாக விளங்குகிறது கடற்கரையில் உள்ள காந்தி சிலை. புதுவையை சினிமாவிலோ அல்லது புகைப்படங்களிலோ காண்பித்தால் இந்த காந்தி சிலையைத்தான் முதன்மையாக காண்பிப்பார்கள்.

இத்தகைய காந்தி சிலை அமைந்துள்ள பகுதி காந்தி திடல் என எல்லோராலும் அடையாளமிட்டு அழைக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் தங்களை புகைப்படம் எடுத்துக்கொள்வது, குடும்பத்தோடு ஓய்வாக அமர்ந்து பேசுவது என தங்களின் பொழுதுபோக்கு இடமாக இதை கருதுகின்றனர். காந்தி சிலைக்கு செல்லும் வகையில் உள்ள சரிவான பகுதி சறுக்கு மரம் போல இருப்பதால் குழந்தைகள் அதில் ஏறி விளையாடுவார்கள். இந்நிலையில் காந்தி சிலை அமைந்துள்ள, சரிவான மேடை பகுதியை சுற்றி கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

இதனால் இங்கு வந்து செல்லும் பொதுமக்கள், காந்தி சிலையை அருகில் சென்று பார்க்க முடியாமலும், குழந்தைகளை அதன் அருகில் விளையாட வைக்க முடியாமலும் ஏமாற்றம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, காந்தி சிலை புதுவையின் ஒரு முக்கியமான அடையாளம்தான். ஆனால் இங்கு வரும் சில பெரியவர்களும் காந்தி சிலை அருகில் நின்று செல்பி எடுக்கின்றனர்.

அவ்வாறு வருபவர்கள் சிலர் கூட்டமாக ஏறி சிலை அருகில் உட்காருகின்றனர். அப்போது சிலர் சிலையை ஆட்டவும் செய்கின்றனர். இதனால் சிலை வெகு விரைவில் சேதம் அடைய வாய்ப்புள்ளது. மேலும் சரிவான பகுதியில் ஏறும் குழந்தைகள் உள்ளிட்டோர் அடிக்கடி கீழே தவறி விழுகின்றனர். சிலையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டும் இங்கு கம்பி வேலி அமைக்கிறோம் என்கின்றனர்.

buy naltrexone maltrexon ldn naltrexone

தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-03-2019

    21-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • flood

    அமெரிக்காவின் அப்பர் மிட்வெஸ்ட் பகுதியில் வரலாறு காணாத வெள்ளம்: பல பகுதிகள் நீரில் மூழ்கிய புகைப்படங்கள்!

  • karnatakabuildingcollapse

    கர்நாடகாவில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த 5 மாடி கட்டிடம் சரிந்தது: இதுவரை 3 பேர் பலியான சோகம்

  • texas

    டெக்சாஸ் அருகே ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து: பல மைல் தூரத்திற்கு கரும்புகை சூழ்ந்தது!

  • camelrace

    எகிப்து நாட்டில் சிறுவர்களுக்கான ஒட்டக ஓட்டப்பந்தய திருவிழா: உற்சாகத்துடன் எண்ணற்ற சிறுவர்கள் பங்கேற்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்