SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சுருளி அருவியில் நீர்வரத்து இல்லை சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் - குழாயில் குளித்துவிட்டு செல்கின்றனர்

2017-03-25@ 11:49:09

கம்பம் : சுருளி அருவியில் தண்ணீர் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள், அருவியில் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். தேனி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களில் சிறப்புமிக்கது சுருளி நீர்வீழ்ச்சி. இது சுற்றுலா தலமாகவும், புண்ணிய தலமாகவும் விளங்குகிறது. ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையிலிருந்து வரும் தண்ணீரும், ஈத்தக்காடு, அரிசிப்பாறை பகுதி ஊற்றுத் தண்ணீரும் சுருளி அருவிக்கு வருகிறது. இதனால் இந்த நீர்வீழ்ச்சியில் ஆண்டின் எல்லா நாட்களிலும் தண்ணீர் விழுந்து கொண்டிருக்கும்.

தேனி மாவட்ட வனத்துறை கம்பம் கிழக்கு வனச்சரகத்தின் பகுதியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். மேலும், சுருளி நீர்வீழ்ச்சியின் அடிவாரப் பகுதியில் தர்ப்பணம் செய்யும் நிகழ்வும் நடைபெறுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூவானம் அணையில் தண்ணீர் முற்றிலும் குறைந்துள்ளதால், சுருளி அருவிக்கு தண்ணீர் வரத்து நின்றுபோனது. அருவி வற்றி வறண்டு கிடக்கிறது. இதனால் சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.

இருப்பினும் சுற்றுலாப்பயணிகளுக்காக, வனத்துறையினர் ஊற்றுத்தண்ணீரை குழாய் மூலமாக கொண்டுவந்து, வனத்துறை சோதனைச்சாவடி அருகே நான்கு குழாய்கள் மூலமாக விழுமாறு ஏற்பாடு செய்துள்ளனர். இதில் சுற்றுலா பயணிகள் குளித்துவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு கடுமையான வறட்சியினால் சுருளி அருவியில் நீர்வரத்து இல்லாமல் போனது. இதனால் ஏமாற்றமடையும் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்காக தற்காலிகமாக ஊற்றுத்தண்ணீரை குழாய் மூலமாக கொண்டுவந்து குளிப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளோம்’’ என்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • award20

    விளையாட்டின் ஆஸ்கர் எனப்படும் லாரியஸ் விருதை கைப்பற்றிய சச்சின் டெண்டுல்கர்!!

  • tenish2020

    டென்னிஸ் புயலால் வெள்ளக்காடாகிய இங்கிலாந்து நகரங்கள்...மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கம்

  • america20201

    இந்தியாவிற்கு வருகை புரியும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்ணில் படாமல் இருக்க சுவர் கட்டி மறைக்கப்படும் குஜராத் குடிசைப்பகுதி

  • mumbai fire20

    மும்பையில் ஜிஎஸ்டி பவனில் 8 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

  • 18-02-2020

    18-02-2020 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்