SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நோணாங்குப்பத்தில் சுற்றுலா பயணிகளை கவர 2 புதிய படகுகள் அடுத்த மாதம் முதல் இயக்கப்படும்

2017-03-17@ 12:33:33

புதுச்சேரி :  புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகளுக்கு சொர்க்கபுரியாக விளங்கும் இடம் நோணாங்குப்பம் படகு குழாம். சங்கராபரணி ஆறு கடலில் கலக்கும் இடத்தில் தீவு ேபான்ற அமைப்பு உள்ளது. இதை கண்டு ரசிக்கும் வகையில் நோணாங்குப்பத்தில் படகு சவாரி இயக்கப்படுகிறது. நோணாங்குப்பத்தில் படகில் இருந்து கிளம்பினால், பேரடைஸ் பீச் என்கிற அந்த தீவு பகுதியை அடையலாம்.

அங்கு கடலில் குளித்துவிட்டு மீண்டும் படகு மூலம் கரைக்கு திரும்பலாம். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க இங்கு ஸ்பீட் படகு, ஜெட் ஸ்கை, பிளசர் போட், பாண்டூன், கயாக், வின்ட் சர்ப், சிக்காரா என சுமார் 40 படகுகள் இயக்கப்படுகிறது. சுற்றுலா பயணிகள் ஆர்வமாக வருவதால் அவர்களுக்காக பல புதிய மாடல்களில் அவ்வப்போது படகுகள் தயார் செய்யப்படுகின்றன. சமீபத்தில் கூட காஷ்மீரில் இருப்பது போல படகு இல்லம் மாடலில் ஹவுஸ் போட் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் தங்கியிருந்து சூரிய உதயம் மற்றும் அஸ்தமனத்தை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
இவ்வரிசையில் தற்போது புதிய வரவாக 2 படகுகள் தயாராகி கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் அதிக பயணிகளை ஏற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 80 நபர்களை ஏற்றி செல்லும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு படகு மாடி வைத்தது போன்ற அமைப்பில் வடிவமைக்கப்படுகிறது. இதில் கீழ் தளத்தில் 40 பேரும், மேல் தளத்தில் 40 பேரும் அமர்ந்து சவாரி செய்யலாம். மற்றொரு படகில் ஒரே தளத்தில் 40 பேர் அமர்ந்து செல்லும் வகையில் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது.

பணிகளை விரைந்து முடித்து, வரும் ஏப்ரல் மாதத்தில் சவாரிக்காக விடப்படும் என கூறப்படுகிறது. இந்த கோடை விடுமுறை சமயத்தில் ஏராளமானோர் படகு சவாரி செய்ய வருவார்கள். அவர்கள் குடும்பத்தோடு சவாரி செய்ய இந்த படகு வசதியாக இருக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படகில் திருமண விருந்து, பிறந்த நாள் கொண்டாட்டம் உள்ளிட்ட பார்ட்டிகளும் வைத்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கள் பற்றாக்குறை
நோணாங்குப்பம் படகு குழாமில் 40 படகுகள் இருந்தபோதும் தற்போது சுமார் 10 படகுகளே இயக்கப்படுகின்றன. இதற்கு படகுகளை இயக்க போதிய ஆட்கள் இல்லை என்று கூறப்படுகிறது. படகு இயக்குவதற்கு மட்டும் இல்லை, டிக்கெட் வழங்குவதற்கும், மற்ற பணிகளை செய்வதற்கும் கூட ஆட்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.

இதனால் சனி, ஞாயிறு மற்றும் விசேஷ விடுமுறை நாட்களில் அதிக அளவிலான பயணிகள் நீண்ட நேரம் சவாரிக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. டிக்கெட் எடுப்பதற்கே நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. அதன்பிறகு படகுகள் வரும் வரை காத்திருந்து ஏற வேண்டியுள்ளது. மற்ற துறைகளில் இருப்பதை போல இந்த துறையிலும் ஆட்களை கண்டபடி எடுப்பது, பின்பு ஆட்சி மாறினால் அவர்களை தூக்கி எறிவது என கண்ணாமூச்சி ஆட்டம் தொடர்கிறது. இதை முறைப்படுத்த வேண்டும் என்கிறனர் இங்கு பணிபுரியும் ஊழியர்கள்.

பொருத்தமான வரன் தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - இலவச பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • children_protestt11

    ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் - பிரசாரத்துக்கு சிறுவர்களை ஈடுபடுத்தும் அரசியல் கட்சிகள்

  • 2500_type_idlyy

    உலக இட்லி தினம் - சென்னையில் 2500 வகையான இட்லிகளின் கண்காட்சி நடந்தது

  • 30-03-2017

    30-03-2017 இன்றைய சிறப்பு படங்கள்

  • FLIHJTarestre

    செம்மரக்கட்டை கடத்தலில் 6 மாதம் தலைமறைவான விமான பணிப்பெண் கைது: கொல்கத்தாவில் சிக்கினார்

  • farmersSUPPORtstuMAR

    விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மாணவர்கள் கடலில் இறங்கி போராட்டம்

மருத்துவம்

இத்தனை வகை டீயா?! வீகன் டயட் நலம் வாழ நனிசைவம்