SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொடைக்கானல் பகுதியில் தொடர் மழையால் அருவிகளில் கொட்டுது நீர் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி

2017-03-17@ 11:56:16

கொடைக்கானல் : கொடைக்கானல் பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால், நகரில் இருந்து வந்த குடிநீர்ப் பிரச்னைக்கு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்ததால் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவியது. நகருக்கு குடிநீர் வழங்கும் நீர்த்தேக்கம் வறண்டுபோனது. விவசாயமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், ஓடைகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கொடைக்கானல் நகர் பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது. மேலும், ஆங்காங்கே புதிதாக சிறு சிறு அருவிகளும் தோன்றி சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

கொடைக்கானல் நகருக்கு இதுவரை ஜிம்கானா பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் மூலம் குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வந்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக தலைமை குடிநீர்த் தேக்கத்தின் நீர்மட்டம் 5 அடியாக உயர்ந்துள்ளது. இதனால், நேற்று முதல் குடிநீர் தேக்கத்தில் இருந்து கொடைக்கானல் நகருக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர் மழையால் இந்த ஆண்டு கோடையில் குடிநீர் பிரச்னை ஏற்பட வாய்ப்பில்லை என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

naltrexone injections click stopping ldn

வரன் தேட தமிழ் மேட்ரிமோனி, இன்றே பதிவு - பதிவு இலவசம்!

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-04-2018

    24-04-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • swati_hunger_strike

    போக்சோ சட்டத்தில் திருத்தம் எதிரொலி... உண்ணாவிரதத்தை கைவிட்டார் சுவாதி மாலிவால்!

  • volvo_boat_comp

    பிரேசில் நகரான இட்டாசாயிலிருந்து வோல்வோ கடல் பாய்மரப் படகுப் போட்டி தொடங்கியது!

  • wildanimals_docto11

    காட்டு மிருகங்களுக்கு முகத்தில் வலியுடன் சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள்

  • teachers_protest11

    டி.பி.ஐ வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்திய இடைநிலை ஆசிரியர்கள் கைது

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்